சீமான் சொல்லித்தான் எடப்பாடி செஞ்சாரா..?

Image

திசை மாறும் விஜய் விவகாரம்

சீமானுக்கும் விஜய்க்குமான சண்டை அத்துமீறி, எல்லை தாண்டி நடக்கிறது. விஜய் பேச்சை எடுத்து ஒவ்வொரு வரியாகப் பேசி அடித்துக்கொண்டு இருக்கிறார் சீமான். இந்த நிலையில் திடீரென அ.தி.மு.க. உள்ளே புகுந்து சீமானைத் தாக்குகிறார்கள். விஜய் அடிவாங்குவதை தடுக்கவே இப்படியொரு நாடகம் என்று சொல்லப்படுகிறது.

வழக்கமாக மேடைகளில் என்னுடைய கோரிக்கையை ஏற்றுத் தான் எடப்பாடி பழனிசாமி நிறைவேற்றினார், ஸ்டாலின் நிறைவேற்றினார், பிரதமர் மோடி நிறைவேற்றினார் என்று அடித்துவிடுவார். இது வரை சீமான் சொன்ன எதற்குமே கண்டுகொள்ளாத அ.தி.மு.க. ஐ.டி. விங் ஆட்கள் இப்போது விஜய்யைக் காப்பாற்றுவதற்காக களத்தில் இறங்கி சீமான் மீது தாக்குதல் நடத்துகிறார்கள்.

இது குறித்து அ.தி.மு.க.வினர், ‘’டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததே சீமான் சொல்லி தான் என்பதை அண்டப்புளுகு, ஆகாசப்புழுகு. எதுவும், யார் சொல்லியும், நாங்கள் செய்யவில்லை. அண்ணாதிமுகவின் இயல்பே பொதுமக்கள் கோரிக்கையைப் பரிவுடன் காது கொடுத்துக் கேட்பதும், அது சரியெனில் தயக்கமின்றி நிறைவேற்றப்படுவதுமே ஆகும்.

இம்மண்ணைக் காக்க அண்ணாதிமுக, டெல்டாவைப் ‘பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்’ என அறிவித்தது. இது முழுக்க முழுக்க அண்ணாதிமுகவின் எண்ணவோட்டம், செயல்பாடு. பொதுமக்கள் கோரிக்கையிது. அண்ணாதிமுக, வேல் யாத்திரையை மத யாத்திரையாக உருவகப்படுத்த முயன்ற, பிஜேபி முருகன் தடுக்கப்பட்டார். அதே நேரத்தில், தமிழ்ப் பக்தர்கள் கோரிக்கையான, ‘தைப்பூசத்திற்கு விடுமுறை’ விடப்பட்டது.

பொதுமக்களின் கோரிக்கைகள் போலவே, சீமானும் கோரியிருக்கலாம். ஆனால் அண்ணாதிமுக செய்தது, சீமானின் கோரிக்கையை ஏற்று மட்டுமேயல்ல. ஆகவே, “நான் கேட்டேன் எடப்பாடியார் செய்தார் என்பது மிகைப்படுத்துதல். நானும் கேட்டேன், எடப்பாடியார் செய்து கொடுத்தார் என்பது சரியாக இருக்கலாம்” தமிழ்க்குடிகளின் அன்பானக் கோரிக்கையை நிறைவேற்றுவதைவிட வேறென்னக் கொள்கை, எங்கள் உயிரினும் மேலான அண்ணாதிமுகவிற்கு இருந்துவிடப் போகிறது..?

அண்ணாதிமுக கூட்டணியைத் தவிர, வேறு கட்சிக்கு ஓட்டுப் போடுபவன், உதயசூரியனுக்கே ஓட்டுப்போடுவதாய்தான் அர்த்தம். அப்படித்தான் சீமானுக்கு ஓட்டுப்போடுபவர்களையும் அண்ணாதிமுக பார்க்கிறது. திமுகவை எதிர்ப்பதாகச் சொல்லி, திமுக எதிர்ப்பு ஓட்டை பிளவுபடுத்தி, திமுகவை ஓட்டரசியலில் பலப்படுத்தும் முயற்சியை உண்மையான தமிழ்நாடு நலம் விரும்பிகள் செய்யவே மாட்டார்கள். ஆனால் சீமான் செய்கிறாரென்றால் சீமான் யாரென்று யோசியுங்கள்..?’’ என்று போட்டுத் தாக்குகிறார்கள்.

அ.தி.மு.க.விற்கு திடீர் ஞானதோயம் பிறந்திருக்கிறதே..

Leave a Comment