ரஜினிகாந்த் பில் கட்டாமல் ஓடினாரா..?

Image

அடுத்த சர்ச்சை ஆரம்பம்

வேட்டையன் படத்தின் புரமோஷனுக்காகவே மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாக ரஜினிகாந்த் ஒரு நாடகம் போட்டதாக சமீபத்தில் ஒரு செய்தி வைரலானது. ஏனென்றால் ரஜினிகாந்த்துக்கு மைனர் ஆபரேஷன் நடக்க இருப்பது 40 நாட்களுக்கு முன்பே எல்லோருக்கும் தெரியும் என்று கூலி படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பேசிய சமூக வலைதளத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ரஜினிக்காகவே முன்கூட்டியே சூட்டிங் நிறுத்தப்பட்டது என்றும் மீண்டும் அவர் வந்ததும் தொடங்கப்படும் என்றும் பேட்டியில் தெரிவித்திருந்தார். இப்படி ரஜினிகாந்த் மருத்துவமனையில் சேரப் போகிறார் என்பது எல்லோருக்குமே தெரியும் எனும்போது, திடீரென கடுமையான வயிற்று வலியில் அட்மிட் மாதிரி டிராமா போட்டது ஏன் என்று அவரது ரசிகர்களே கேள்வி எழுப்புகிறார்கள். இந்த பிரச்னைக்காக மருத்துவமனைக்குப் போவதாக ரஜினி முன்கூட்டியே அறிவித்திருந்தால் யாரும் பதட்டப்பட்டிருக்கத் தேவை இல்லை என்று வருந்துகிறார்கள்.

இந்த விஷயத்தை ரஜினிகாந்த் வேட்டையன் படத்தின் புரமோஷனுக்காகவே பயன்படுத்திக்கொண்டார் என்றே இப்போது சினிமா விமர்சகர்கள் உறுதி செய்கிறார்கள். ரஜினிக்கு உடல் சரியில்லை என்றால் ஒரு மாபெரும் அனுதாப அலை கிளம்பும், அது வேட்டையன் படத்துக்கு நல்ல புரமோஷனாக இருக்கும் என்பதாலே திட்டமிட்டு திடீர் அட்மிட் என்று சீன் போட்டிருக்கிறார்கள். இது தான் ரஜினியின் கடைசி படமோ என்று ரசிகர்களை எமோஷனல் பிளாக்மெயில் செய்து தியேட்டருக்கு வரவழைக்கிறார்கள் என்று சமூகவலைதளங்களில் ரஜினி மீது கடுமையாக விமர்சனம் வைக்கிறார்கள்.

இந்த நிலையில் அப்பல்லோ மருத்துவமனைக்கு ரஜினி பில் செட்டில் செய்யவில்லை என்று ஒரு சர்ச்சை சமூகவலைதளத்தில் வைரலாகிவருகிறது. வாடகை கொடுப்பதற்கே தயங்கும் குடும்பம் என்பதால் இதில் உண்மை இருக்க வாய்ப்பு உண்டு என்று அவரது ரசிகர்களும் ஒப்புக்கொள்கிறார்கள். ரஜினிகாந்த் அட்மிட் ஆனதால் மருத்துவமனைக்குத்தான் நல்ல பெயர் என்று சொல்லி கட்டணத்தில் விலக்கு கேட்டதாகவும், அதற்கு நிர்வாகம் ஒப்புக்கொண்டதாகவும் சொல்கிறார்கள். இதையடுத்து ரஜினி பில் கட்டாமல் ஓடியது சர்ச்சையாகியுள்ளது. இது உண்மையா என்பதை ரஜினி குடும்பமே கூற வேண்டும். ஏதாவது ஆதாரம் வெளியிட்டால் ரசிகர்கள் நம்புவார்கள்.

ஒருவேளை, இதையும் வேட்டையன் படத்துக்கு புரமோஷனாகப் பார்க்கிறார்களோ..?

Leave a Comment