அடேங்கப்பா தகவல்கள்
சூரிய ஒளி மின்சாரத் திட்டத்தை பெறுவதற்கு இந்திய அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற விவகாரத்தில் அமெரிக்க நீதிமன்றம் பதிவு செய்துள்ள நிலையில் அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வேண்டுகோள் வைத்திருக்கிறார். பிரதமர் மோடி அதானியை பாதுகாப்பதால் தான் தொடர்ந்து அதானி குற்றச் செயல்களில் ஈடுபடுகிறார் எனவும் காட்டம் காட்டியிருக்கிறார்.
இந்த நிலையில் தமிழகத்தில் அதானி யாருக்குப் பணம் கொடுத்தார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அறப்போர் இயக்கத்தினர், ‘’தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சியில் அதானி செய்த 3000 கோடி ஊழல் புகாரை விசாரிக்க விடாமல் முதலமைச்சர் ஸ்டாலின் அதானியை காப்பாற்றி வருகிறார் என்றால் என்ன அர்த்தம்’ என்று கேட்கிறார்கள்.
தி.மு.க.வினர் இந்த விஷயத்தில் தங்களுக்கு எந்தப் பங்கும் இல்லை என்று பேசுகிறார்கள். அவர்கள் கொடுக்கும் விளக்கம் மூலம், ‘’ஜெயலலிதா ஆட்சியில் 04.07.2015 அன்று அதானிக்கு சொந்தமான நிறுவனங்களிடமிருந்து ஒரு யூனிட் சூரிய ஒளி மின்சாரத்தை 7.01 ரூபாய்க்கு வாங்குவதாக ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் 25 ஆண்டுகளுக்கானது. ஒன்றிய அரசால் இயக்கப்படும் Solar Energy Corporation India நிறுவனம்தான் தற்போது சூரிய ஒளி மற்றும் காற்றாலை மின்சாரத்துக்கான ஏலத்தை நடத்துகிறது. 2019ல் இருந்து மாநில அரசு அங்கிருந்துதான் சூரிய ஒளி மின்சாரத்தை வாங்குகிறது.
ஆக, அதானி குழுமத்துடன் 2014ஆம் ஆண்டே ஒப்பந்தம் போட்டு ஊழலை ஆரம்பித்தவர் அம்மையார் ஜெயலலிதா. அதன் நீட்சியாக 2019ஆம் ஆண்டு PM KUSUM திட்டத்தின் கீழ் 1500 MW Solar Power Procurement செய்வது என எடப்பாடி பழனிசாமி தலைமையில் முடிவானது முதல் கட்டம் 5th May 2020 PSA படி அதிமுக அரசு 500MW மின்சாரததை ₹2.78/unit என வாங்கியது
அதன் பிறகு வந்த திமுக ஆட்சியில் அதிமுக ஆட்சியில் போட்ட ஒப்பந்தப்படி 16th Sep 2021 PSA படி 1000MW மின்சாரததை அதிமுக ஆட்சியில் கொடுக்கப்பட்டவிலையை விட குறைவாக அதாவது ₹2.61/Unit என வாங்கி வருகிறது அதாவது அதிமுக ஆட்சியில் லஞ்சம் கொடுக்கப்பட்டு அதிக விலைக்கு விற்கப்பட்ட ஒப்பந்தத்தை உடைத்து யூனிட் ஒன்றுக்கு 17 காசு குறைத்து வாங்கப்பட்டது.. லஞ்ச்சத்தை வாங்கிக் கொண்டு அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு அரசாங்கத்திற்கு மிகுந்த இழைப்பை செய்திருக்கிறார்கள் ஜெயலலிதாவும் எடப்பாடியும்.. இன்று அதை தான் அமெரிக்க நீதிமன்றம் சொல்லி இருக்கிறது’’ என்கிறார்கள்.
இது உண்மை என்றால், ஏன் அ.தி.முக.வினர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவில்லை..? அப்படியென்றால் உங்களுக்கும் பங்கு இருக்கிறது என்றுதானே அர்த்தம் என்கிறார்கள். பா.ஜ.க.,, அ.தி.முக., தி.மு.க. என எல்லாமே ஊழல் மட்டைகள் தான்.