அமெரிக்காவுடன் மேம்பாட்டு ஒப்பந்தம்

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி – 408

சென்னை மாநகரின் வளர்ச்சிக்கு புதிதாக என்ன செய்ய முடியும், புதிய திட்டங்கள் என்ன தேவைப்படும் என்ற சிந்தனை மேயர் சைதை துரைசாமிக்கு எப்போதுமே உண்டு. சென்னையின் வளர்ச்சிக்குக் கிடைக்கும் எந்தவொரு வாய்ப்பையும் மேயர் சைதை துரைசாமி தவறவிடுவதே இல்லை. அந்த வகையில் தான் அமெரிக்காவுடன் ஒப்பந்தம் போடப்படும் வாய்ப்பு கிடைத்தது.

அமெரிக்காவில் 1950-ம் ஆண்டில்  சகோதர நகரங்களின் இயக்கம்  ஆரம்பிக்கப்பட்டது. அமெரிக்க நாட்டின் 400 நகரங்களும், உலக அளவில் 1600 நகரங்களும் இந்த அமைப்பில் உள்ளன. ஏற்கெனவே இந்த இயக்கத்தில் இந்தியாவிலிருந்து 18-க்கும் மேற்பட்ட நகரங்கள் இணைந்துள்ள நிலையில், சென்னை நகரையும் இணைத்துக்கொள்ள முடியும் என்பதை அறிந்தார் மேயர் சைதை துரைசாமி.

உடனடியாக இது குறித்து தகவல்கள் சேகரித்து, சென்னை மாநகராட்சியை அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்றுவதற்கு ஒப்பந்தம் மேற்கொள்வதற்கு அன்றைய முதல்வர் ஜெயலலிதாவிடம் அனுமதி பெற்றார்.

இதையடுத்து விறுவிறுவென பணிகள் நிறைவேறின. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் அமைந்துள்ள சான் ஆன்டனியோ மாநகருடன் சென்னையை இணைத்து வளர்ச்சிப் பணிகளில் ஈடுபடுத்துவதற்காக ஜூலை 2013-ல் மாநகராட்சி ஆணையர் விக்ரம் கபூர் ஐ.ஏ.எஸ். அவர்களுடன் அமெரிக்காவுக்குப் பயணமானார் சைதை துரைசாமி.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment