ருசியான பொண்டாட்டி ஜோக்ஸ்

Image

சிரிச்சிக்கிட்டே இருங்க

மனைவி : என்னங்க நம்மோட 5 வது கல்யாண நாளுக்கு சிங்கப்பூருக்கு கூட்டிட்டுப் போறீங்களா..?

கணவன் : கண்டிப்பா கூட்டிட்டுப் போறேன். ஆனா, திரும்பவும் கூட்டிட்டு வர மாட்டேன். சரியா..?

……………..


பெண் : நீங்க என் சிரிப்பை பார்த்து மயங்கிட்டீங்கன்னு நினைக்கிறேன். பார்த்துக்கிட்டே இருக்குறீங்க…

ஆண் : நான் ஒரு பல் டாக்டர். உங்க சிரிப்பு கேவலமா இருக்கு, ஆஸ்பத்திரிக்கு வர்றீங்களா..?

……………

தந்தை: மகனே நீ பரீட்சையில பாஸானா உனக்கு ஒரு சைக்கிள் வாங்கித் தரேன்…

மகன்: ஃபெயிலாயிட்டா?

தந்தை: பத்து சைக்கிள் வாங்கித் தரேன். சைக்கிள் கடை வச்சிப் பொழைச்சிக்கோ..!

……………….

அவன் : நீ எதைப் பேசினாலும் எதிர்த்தே பேசுறாரே, அவர் யாருடா?

இவன் : எங்க வீட்டுக்கு எதிர்வீட்டுக்காரர்..!

…………………

அவன் :  இந்தப் பாம்பு கொஞ்ச நேரத்துக்கு முன்னாலதானே சட்டையை உரிச்சுது. இப்ப திரும்பவும் எதையோ உரிக்குதே..!

இவன் :   ஒருவேளை பனியனா இருக்குமோ?

………………..

நோயாளி : டாக்டர் ஆபரேசனால் எனக்கு பின்னாடி ஏதாவது பிரச்னை வருமா..?

டாக்டர் : அப்படியெல்லாம் எதிர்காலத்து மேலே நம்பிக்கை வைக்காதீங்க.

………………….

அவன் : அவரோட  பொண்ணுக்குத்தான் கல்யாணம் ஆயிடுச்சே. இன்னும் அவர் ஏன் மாப்பிள்ளையைத் தேடிகிட்டி இருக்கார்.

இவன் : அட, அவர் பொண்ணை கல்யாணம் முடிச்ச மாப்பிள்ளையைத்தான் காணோமாம்…  அவரைத்தான் இப்போ தேடறார்

…………………

Leave a Comment