பொதுநலச் சங்கத்தினரின் அன்புத் தோழன்

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி – 127

மாநகர மேயர், அமைச்சர் போன்ற பெரிய பதவிக்கு வந்துவிட்டால், தெரிந்தவர்கள், நண்பர்களிடமிருந்து முழுமையாக விலகிச் செல்வதே நிறைய அரசியல்வாதிகளின் நடைமுறையாக இருக்கும். ஏனென்றால், ஒவ்வொரு நபரும் ஏதேனும் ஒரு கோரிக்கையைச் சொல்லி, அதனை நிறைவேற்றித் தருமாறு வேண்டுகோள் வைப்பார்கள். அதனை தட்டிக்கழிக்க முடியாமல் தயங்க வேண்டியிருக்கும் என்பதாலே, தாங்கள் பிஸியாக இருப்பதாக காட்டிக்கொண்டு யாரையும் பக்கத்தில் நெருங்க விட மாட்டார்கள்.

இந்த நிலையில் தான், பொதுநலச் சங்கத்தினர் கோரிக்கை மனுக்களுடன் தன்னை அதிகாலையில் நேரில் சந்திக்கலாம் என்று சைதை துரைசாமி அறிவிப்பு வெளியிட்டார்.

காரணம் கேட்டபோது, ‘பொதுநலச் சங்கத்தினர் தன்னலம் பாராமல் பொதுநலத்துக்காக உழைப்பவர்கள். மக்கள் பிரதிநிதிகள் செய்ய வேண்டிய வேலையை இவர்கள் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்கிறார்கள். அதோடு இவர்களது கோரிக்கைகள் எல்லாமே நியாயமாகவும் நகரின் வளர்ச்சிக்காகவும் இருக்கும். தங்கள் நேரத்தை குடும்பத்திற்கு செலவழிக்காமல் பொதுநலனுக்காக எந்த பிரதிபலனும் பாராமல் உழைக்கிறார்கள். ஆகவே, இவர்களை ஊக்குவிப்பது மக்களுக்கும் நிர்வாகத்திற்கும் நல்லது. இதனால் மாநகராட்சி ஊழியர்களின் பணிச் சுமை குறையும் அதோடு பொதுநலச் சங்கத்தினரின் நேரமும் மிச்சமாகும்’’ என்று காரணம் கூறினார்.

இதையடுத்து அதிகாலையில் மேயர் சைதை துரைசாமியை நேரில் சந்தித்து புகார் மனுக்களைக் கொடுப்பதற்கு பொதுநலச் சங்கத்தினர் மிகுந்த ஆர்வம் காட்டினார்கள்.

எத்தனை பேர் வந்தாலும் அத்தனை பேருக்கும் காலையில் சுக்குமல்லி காபி கொடுத்து உபசரிப்பது மட்டுமின்றி உதவியாளர்கள் மூலம் மனுக்களை சேகரிக்காமல் சைதை துரைசாமியே நேரில் மனுக்களை வாங்கிக் கொள்வதும் சென்னை முழுக்க பரபரப்பாக பேசப்பட்டது. இதையடுத்து நிறைய பொதுநலச் சங்கங்கள் புதிதாக உருவான வரலாறும் உருவானது.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment

Image Not Found

கட்டுரை பகுதிகள்