• Home
  • காமம்
  • நடிகை ஓவியாவுக்கு பாராட்டுகள்

நடிகை ஓவியாவுக்கு பாராட்டுகள்

Image

வீடியோ வேண்டுமா ப்ரோ..?

நேற்றைய தினம் முதல் சமூகவலைதளங்களில் மிக அதிக எண்ணிக்கையிலான நபர்கள் நடிகை ஓவியாவின் நிர்வாண வீடியோ தேடிக்கொண்டு இருக்கிறார்கள். முழு வீடியோ கிடைத்துவிட்டதா, எத்தனை வீடியோ வெளியாகியுள்ளது, தெளிவாகத் தெரிகிறதா என்றெல்லாம் பதை பதைக்கிறார்கள். பணம் வேணுமானாலும் தருகிறேன், முழு வீடியோ அனுப்புங்கள் என்று கோரிக்கை வைக்கிறார்கள்.

வீடியோ தேடி அலைபவர்களில் இளைஞர்கள் மட்டும் இல்லை, வயதானவர்களும் இருக்கிறார்கள். குறிப்பாக ஓவியாவின் வயதில் மகள் இருப்பவர்ளும், ஓவியா வயதில் பேத்தி இருப்பவர்களும் அந்த வீடியோவை தேடுகிறார்கள். அவர்கள் யாருமே இதை ஒரு தவறு என்று நினைப்பதில்லை.

ஓவியா ஒரு நடிகை என்பதால் அவர் அந்தரங்கத்தைப் பார்க்க அதீத ஆர்வத்துடன் தேடுகிறோம். அந்த வீடியோவை பார்ப்பதில் சந்தோஷம் கிடைக்கும், பகிரும்போது ஒரு பெருமை கிடைக்கும். அதனால் தேடிக்கொண்டு இருக்கிறோம், இதை கிண்டல் செய்வதால் கண்டனம் செய்வதால் எங்களுக்கு ஒன்றும் இல்லை, நாங்கள் அப்படித்தான் என்கிறார்கள்.

இது தான் ஆண்களின் பொதுவான பாலியல் மனோபாவம். எல்லா நேரமும் அடுத்த பெண்களின் அந்தரங்கம் பார்க்கத் துடிக்கும் ஆவல். ஒரே ஒரு முறை பக்கத்து வீட்டுப் பெண்ணின் அந்தரங்கத்தை அறைகுறையாகப் பார்த்துவிட்டால் கூட போதும் என்று எட்டைப் பார்க்கும் துடிப்பு. ஒரு பெண்ணின் அந்தரங்கம் என்பது அவளுடைய சொத்து என்பதை எந்த ஆணும் நம்புவதில்லை.

அதேநேரம், தங்கள் வீட்டுப் பெண் மட்டும் பரிசுத்தமாக இருக்க வேண்டும் என்ற பாதுகாப்பு உணர்வுடன் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு வேளை தங்கள் வீட்டுப் பெண்ணின் அந்தரங்கம் வெளியாகிவிட்டால் அந்த பெண்ணை தற்கொலை செய்யத் தூண்டும் அளவுக்கு மன உளைச்சலுக்கு ஆளாக்கிவிடுவார்கள். அவளையே குற்றவாளி என்பார்கள். தன்னைப் போன்று நிர்வாணம் தேடிய ஆணின் செயல் என்று சமாதானம் ஆக மாட்டார்கள். இத்தகைய ஆண் பாலியல் மனோபாவம் காலம் காலமாக தொடர்கிறது. அடுத்த காலத்திலும் இருக்கவே செய்யும்.

இதனை பெண்களே தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். அப்படியொரு செயலை தைரியமாகச் செய்திருக்கிறார் நடிகை ஓவியா. அந்த வீடியோ குறித்த ரசிகர்களின் கேள்விகளுக்கு முதலில் அது நான் இல்லை என்று சொன்னாலும் அடுத்தடுத்து நெத்தியடியாகப் பதில் கொடுத்திருக்கிறார். உங்களுக்குப் பிடித்திருக்கிறது என்றால் என்ஜாய் செய்யுங்கள் என்கிறார். தெளிவாக இல்லை என்று வருந்தும் ரசிகருக்கு, ‘நெக்ஸ்ட் டைம் ப்ரோ’ என்று ஒரு அன்புத் தங்கையாக பதில் சொல்லியிருக்கிறார்.

இந்த தைரியமும் தெளிவும் அத்தனை பெண்களுக்கும் வர வேண்டும். வீடியோவில் காணும் ஒவ்வொரு பெண்ணின் நிர்வாணமும் தங்கள் சகோதரியின் உடல், தங்கள் தாயாரின் உடல் என்ற பதட்டத்தை ஆண்களுக்கு வரவழைப்பதே முக்கியம். அதை செய்யத் தொடங்கியிருக்கிறார் ஓவியா. அவருக்குப் பாராட்டுகள்.

உங்கள் சகோதரியின் வீடியோ வேண்டும் என்றால் ரிடிவீட் செய்துவிட்டு டிஎம் வாருங்கள் ப்ரோ.

Leave a Comment