நெரிசல் இல்லாத பேருந்து நிறுத்தங்கள்

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி – 252

போக்குவரத்து சாலைகளில் மாநகரப் பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தி பயணிகளை ஏற்றியும், இறக்கியும் செல்வதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு நல்ல தீர்வு காணப்பட வேண்டும் என்று விரும்பினார் மேயர் சைதை துரைசாமி. இதற்கு மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் மாநகரப் பேருந்து அதிகாரிகள் பெரிதாக ஒத்துழைப்பு வழங்கவில்லை.

இந்த நிலையில், கடற்கரை சாலையில் விவேகானந்தர் இல்லம் அருகே இருந்த பேருந்து நிறுத்தம் செயல்படாமல் இருப்பதாகவும், அதை மீண்டும் இயக்க வேண்டும் என்றும் மேயர் சைதை துரைசாமிக்கு ஆசிரமத்தில் இருந்து ஒரு விண்ணப்பம் வந்தது. இதனை சரியாகப் பயன்படுத்திக்கொள்ள விரும்பிய மேயர் சைதை துரைசாமி நேரில் அந்த இடத்துக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

விவேகானந்தர் இல்லம் அருகே அமைக்கும் பேருந்து நிறுத்தம் அனைவருக்கும் பயன்படும் வகையிலும், எந்த போக்குவரத்து இடையூறும் இன்றி அமைய வேண்டும் என்று திட்டமிட்டு வடிவமைத்தார். மேயர் சைதை துரைசாமி கூறிய ஆலோசனையின் அடிப்படையில்,  கடற்கரை சாலையில் உள்ளடங்கிய வகையில் ஒரு  மாதிரி பஸ் நிறுத்தம் அமைக்கப்பட்டது.   

புதிய வகையில் அமைக்கப்பட்ட பேருந்து நிறுத்தத்தில் அடுத்தடுத்து  நான்கு பேருந்துகள் எவ்வித போக்குவரத்து இடைஞ்சலும் இல்லாமல் நிறுத்தும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இது ஒரு பரீட்சார்த்த முயற்சி என்பதால் தன்னுடைய  மேயர்  நிதியிலிருந்து இந்த பேருந்து நிறுத்தத்திற்கு மேயர் சைதை துரைசாமி  நிதி ஒதுக்கீடு  செய்தார். அதோடு, இங்கு பயணிகள் அமர்வதற்கு வசதியான  இருக்கைகள்  அமைக்கப்பட்டன. இதே போன்று  கிண்டி ரேஸ் கோர்ஸ் சாலை ரயில் நிலையம் அருகிலும்  மாதிரிப் பேருந்து  நிறுத்தம் அமைக்கப்பட்டது.

இந்த மாதிரி பேருந்து நிறுத்தம் மேயர் சைதை துரைசாமியின் சிந்தனைக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாக அமைந்தது. இந்த பேருந்து நிறுத்தங்களுக்குள் பஸ் நின்று செல்வதால் யாருக்கும் எந்த இடையூறும் இல்லாமல் போனதுடன் பயணிகளுக்கும் பாதுகாப்பான பயணம் கிடைத்தது. இதே போன்று அனைத்து பேருந்து நிறுத்தங்களையும் சரியான இடத்தில் அமைக்க முடியும் என்கிறார் மேயர் சைதை துரைசாமி. இவரது சிந்தனைக்கு இன்றும் பாராட்டுகள் கிடைத்துவருகின்றன.

நாளை பார்க்கலாம்.

Leave a Comment