சாலை பழுது பார்க்க காங்கிரீட் கேக்

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி – 238

ஹாரிங்டன் ரோட்டில் போடப்பட்ட காங்கிரீட் சாலை சென்னையின் அடையாளமாகவே மாறிப்போனது. இந்த சாலையின் சிறப்பு சென்னையின் முகத்தையே மாற்றும் அளவுக்குப் புகழ் பெற்று விளங்குகிறது என்று முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட பலரும் மேயர் சைதை துரைசாமிக்குப் பாராட்டு தெரிவித்தார்கள்.

ஆனாலும், சென்னை முழுக்க காங்கிரீட் சாலையாக மாற்றுவதற்கு மேயர் சைதை துரைசாமிக்கு வாய்ப்பு அமையவில்லை. அதனால் குறைந்த எண்ணிக்கையில் அதாவது 69 பேருந்து சாலைகள் மற்றும் 1,125 உட்புற சாலைகள் மட்டுமே மேயர் சைதை துரைசாமியால் காங்கிரீட் சாலைகளாக மாற்றம் பெற்றன. அதேநேரம், சென்னை மாநகரம் முழுக்க காங்கிரீட் சாலைகள் அமைக்கப்பட வேண்டும் என்று ஒரு தீர்மானம் நிறைவேற்றினார்.

இந்த நேரத்தில் தார் சாலையில் பழுது என்றால், எளிதாக தார் கலவை போட்டு மூடிவிட முடியும். காங்கிரீட் சாலையை உடைப்பதும் சீர்செய்வதும் கடினமான பணி. இதனால் அந்த சாலை நிரந்தரப் பழுதாகிவிடும் என்று காங்கிரீட் சாலை குறித்து பலரும் குறை சொன்னார்கள்.

இந்த பிரச்னைக்கு ஒரு புதிய தீர்வு வைத்திருந்தார் மேயர் சைதை துரைசாமி. அதாவது, காங்கிரீட் ரோட்டை துண்டாக்கும் இயந்திரம் மூலம் வெட்டி எடுக்க வேண்டும். அதாவது ரோட் கட் எனப்படும் வகையில் கேக் போன்று பழுது பார்க்கும் இடத்தை வெட்டி எடுக்க வேண்டும். வேலைகள் முழுமையாக முடிந்ததும், வெட்டி எடுக்கப்பட்ட காங்கிரீட் துண்டை அதே இடத்தில் வைத்து சீர்செய்துவிட வேண்டும். இப்படி செய்யும்போது, வெட்டி எடுக்கப்பட்ட சுவடே தெரியாது. இதுபோன்ற கட்டிங் இயந்திரம் ஒவ்வொரு வார்டுகளுக்கும் வாங்கப்பட்டுவிட்டால், சேதாரம் இல்லாமல் காங்கிரீட் ரோட்டை சரிசெய்து பராமரிக்க முடியும் என்று விளக்கம் கொடுத்தார். அதன்பிறகு காங்கிரீட் ரோட்டை குறை சொல்வதற்கு யாரும் முன்வரவில்லை.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment