தைரியத்திற்கு பெருகும் ஆதரவு
விவாத மேடையில், செருப்பைக் காட்டி அநாகரிகமாக நடந்து கொண்ட அர்ஜுன் சம்பத்திடம் “நீங்கள் செருப்பை வைத்து அரசியல் நடத்துகிறவர்கள் . நாங்கள் புத்தகத்தை வைத்து அரசியல் பேசுகிறவர்கள்’’ என்று தைரியமாகப் பேசிய மதிவதனிக்கு ஆதரவு பெருகி வருகிறது.
இதுகுறித்து மதிவதனி, ‘’மாலை முரசு விவாத நிகழ்ச்சியில் அர்ஜூன் சம்பத் செய்த ரவுடித்தனத்திற்கும், அவர்களின் ஏவல் ஆட்களின் வெற்றுக் கூச்சலுக்கும் எதிர்ப்பு தெரிவித்தும், எப்போதும் நீ எங்கள் பிள்ளை என்ற உணர்வுடன் நேரிலும், தொலைபேசி, முகநூல், வாட்சாப், டிவிட்டர் என்று அனைத்து தளத்திலும் உடன் நின்ற தோழர்கள் அனைவருக்கும் நன்றி அர்ஜூன் சம்பத்தின் செயல் எனக்கு எந்தவித தடுமாற்றத்தையும் கொடுக்கவில்லை. அசிங்கத்தில் துர்நாற்றம் தான் வரும்; அதில் நறுமணத்தையா எதிர்ப்பார்க்க முடியும்? என்ற வகையில் நான் கடந்து சென்றுவிட்டேன். ஆனால் வீடியோவை தோழர்கள் மூலம் பார்த்த நம் தோழர்கள் அத்தனை ஆதரவு குரலை தந்துள்ளனர். தனித்தனியாக நன்றி சொல்ல முடியவில்லை. பேரன்புகள்!
அண்ணன் செந்தில்வேல் முதலில் அழைத்து இது என்ன பாப்பா? இப்படியா நடந்துக்கிட்டா என்று ஆத்திரப்பட்டார். அவரிடம் சொன்ன அதே பதிலைத் தான் அதற்கு அடுத்து அழைத்த அனைவருக்கும் சொன்னேன். அவரிடம் அதைத்தான் எதிர்ப்பார்க்க முடியும். மேலும் அவர் நினைத்தது ஒன்று; ! நடந்தது வேறு ஒன்று. பக்கம் வந்தால் தடுமாறுவேன்; தடுமாற வேண்டும் என்று நினைத்துதான், பாய்ந்து வந்தார். கீழ் இருந்து அவர்களின் சங்கி ஆயுதமான ‘செருப்பு’ வேறு. அவர் வேற காலில் இருக்கும் செருப்பை கழட்டி மாட்டுகிறார். உண்மையாகவே இது எதுவுமே என்னை சலனப்படுத்தவில்லை. 0.1% கூட பயத்தை தரவில்லை. அய்யாவின் கொள்கை பயணத்தில் அவர் சந்தித்த எதிர்ப்புகளை வாசித்து ,வாசித்து பக்குவப்பட்டு இருப்பது அதற்கு முக்கிய காரணம்.
என் அப்பாவுடன் பழகிய பலர், பின்னூட்டங்களில் “சேது அண்ணன் துணிச்சல் , அவரும் வா பாத்துப்போம் என்று நிற்பார்” என்று எழுதியிருந்தார்கள். அது உண்மைதான். அன்றும் இன்றும் என்றும் அப்பாவின் “துணிச்சல்” என்ற சாயலில் அப்படியே இருக்கத்தான் ஆசைப்படுகிறேன். மகிழ்ச்சியோ,பிரச்சனையோ முதலில் அப்பாவை தான் நினைவு கூர்கிறேன். சரி, அதெல்லாம் விடுங்க. அவர் அவ்ளோ ரவுடித்தனம் பண்ணாரே, நீங்க என்ன பண்றிங்க என்று நீங்கள் கேட்பது எனக்கு கேட்கிறது. வெள்ளிக்கிழமை இரவு நிகழ்ச்சி முடிந்தது. அடுத்த நாள் காலை பட்டமளிப்பு விழா, இரவு சேலம் ரயில். இன்று காலை சேலம், மதியம் ஈரோடு நிகழ்ச்சி, இரவு சென்னை. நாளை MCC கல்லூரியில் நிகழ்ச்சி. என்னங்க கடைசி வரை அவர என்ன பண்ணிங்கனு சொல்லவே இல்ல? அதான் சொல்கிறோம் அவுங்க செருப்பைத் தூக்கட்டும்; நம்ம புத்தகத்தோடு பயணிப்போம்! உடன் நின்ற அனைவருக்கும் பேரன்பும் நன்றியும். அரங்கத்திலேயே தங்கள் கண்டனக் குரலை வலிமையாக எழுப்பிய சட்டமன்ற உறுப்பினர்கள் அண்ணன் பரந்தாமன், ஆளூர் ஷாநவாஸ் ஆகியோருக்கு நன்றி’’ என்று கூறியிருக்கிறார்.
உண்மையை விட வலிமையான ஆயுதம் வேறு எதுவும் இல்லை என்பதை மதிவதனி தெளிவாக உணர்த்தியிருக்கிறார்.