கம்ப்யூட்டர் மயமான ஆவணங்கள்

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி –  271

மாநகராட்சியின் ஆவணங்கள் எல்லாமே சிதிலமடைந்து, மோசமான நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார் மேயர் சைதை துரைசாமி. இந்த அவலத்தை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு சிலர் ஆவணங்களைத் திருத்துவது, திருடுவது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவதையும் அறிந்தார். ஆவணங்களைக் காணவில்லை என்று கணக்கு காட்டி தில்லுமுல்லு நடப்பதை அறிந்தார். அதனாலே அத்தனை ஆவணங்களையும் கம்ப்யூட்டர் மயமாக்க வேண்டும் என்று உத்தரவு போட்டார்.

மேயர் சைதை துரைசாமி போட்ட உத்தரவை அதிகாரிகள் வழக்கம் போல் நிராகரித்தார்கள். நடைமுறைக்கு அதெல்லாம் சாத்தியமே இல்லை. மிகவும் பழைய ஆவணங்களைத் தொட்டாலே உதிர்ந்துவிடும், இப்போது இருக்கும் அளவுக்குக் கூட பாதுகாப்பு இருக்காது. எப்போதாவது தேவை என்றால் மட்டுமே அவற்றை பார்க்கப் போகிறோம். அதனால் இவற்றைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என்றெல்லாம் சமாதானம் சொன்னார்கள்.

அதன் பிறகு நமது ஊழியர்களுக்கு இப்போதே தலைக்கு மேல் வேலை இருக்கிறது, இதையெல்லாம் வெளிநபர்களிடம் நம்பி ஒப்படைக்க முடியாது என்றும் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

ஆனால், தன்னுடைய மேயர் காலத்தில் ஒரு சென்டிமீட்டர் இடம் கூட அபகரிப்பு நடக்கக்கூடாது என்பதில் மேயர் சைதை துரைசாமி உறுதியாக இருந்தார். ஆகவே, கண்டிப்பாக எல்லா ஆவணங்களையும் கம்ப்யூட்டர் மயமாக்க வேண்டும் என்பதில் உறுதியோடு இருந்தார். ஆகவே, நிலம்  மற்றும்  உடைமைத் துறையில் உள்ள  4378 பிளாக் மேப் மற்றும் 145  நிரந்தர  நிலப்பதிவேடுகள்  ஸ்கேனிங் செய்யும் பணி,  கணிப்பொறி மையம்  மூலம் தொடரப்பட்டது. ஆவணங்கள் என்றென்றும் அழியாத வகையிலும், கையாள்வதற்கு வசதியாகவும் கம்ப்யூட்டரில் சேமிக்கப்பட்டன. மேயர் சைதை துரைசாமி மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை காரணமாக மாநகராட்சி நிலம் முழுமையாகப் பாதுகாக்கப்பட்டது.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment