டிரான்ஸ்ஃபர் ஸ்டேஷன்களுக்கு மூடுவிழா

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி – 298

பெருநகர சென்னை மாநகராட்சி மேயராக சைதை துரைசாமி பதவிக்கு வந்த நாளில் இருந்து, ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொரு கட்டத்திலும் ஆய்வுகள் செய்துகொண்டே இருந்தார். எந்தவொரு நடவடிக்கையும் இதுவரை எப்படி நடந்துகொண்டிருக்கிறது என்பதை ஆய்வு செய்து, இனிமேல் எப்படி நடக்க வேண்டும் என்று திட்டம் வகுத்துக் கொடுப்பார். அந்த வகையில் குப்பை மேலாண்மையில் அதிக கவனம் செலுத்தினார் மேயர் சைதை துரைசாமி.

இந்த நேரத்தில் குப்பைகள் எப்படி அகற்றப்படுகின்றன என்பது குறித்து முழுமையாக ஆய்வு செய்தார். அப்போது, சென்னையில் அகற்றப்படும் குப்பைகள் முதலில் டிரான்ஸ்ஃபர் ஸ்டேஷனுக்கு கொண்டுசெல்வது வழக்கமாக இருந்தது. அதாவது சென்னைக்குள் இருக்கும் ஒரு சிறிய குப்பைக் கிடங்கிற்கு கொண்டுசென்று குப்பைகள் குவிக்கப்பட்டன. அதன்பிறகு, அந்த குப்பை அகற்றப்பட்டு சென்னைக்கு வெளியே உள்ள பெரிய குப்பைக் கிடங்கிற்கு கொண்டுசெல்வது வழக்கமாக இருந்தது.

இப்படி சென்னைக்குள் குப்பையை சேகரித்து வைப்பதற்கு மட்டும் 7 டிரான்ஸ்ஃபர் ஸ்டேஷன்கள் இயங்கிவந்ததைக் கண்டு ஆச்சர்யமானார். ஒரே நேரத்தில் முடிக்க வேண்டிய வேலை, தேவையில்லாமல் சுற்றிவளைத்து முடிக்கப்படுவதை உணர்ந்துகொண்டார். காதைச் சுற்றி மூக்கைத் தொடும் நடவடிக்கை முந்தைய காலத்தில் நடைமுறையில் இருந்தது என்றாலும், இப்போது அந்த நடைமுறை வேண்டாம். ஒரே நேரத்தில் குப்பை அகற்றப்பட வேண்டும் என்று உத்தரவிட்டார்.

அதன்படி, சென்னைக்குள் இருந்த  டிரான்ஸ்ஃபர் ஸ்டேஷன்களை மூடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.  இதன் மூலம் எல்லா நேரமும் சுற்றிக்கொண்டே இருந்த குப்பை லாரிகளின் நடமாட்டமும் குறைந்தது. இதுபோன்ற அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்ட காரணத்தாலே, மேயர் சைதை துரைசாமியின் நிர்வாகத் திறனை அதிகாரிகள் இன்றளவும் புகழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment