• Home
  • அரசியல்
  • இலங்கையில் சீனாவின் கம்யூனிச ஆட்சி வந்தாச்சு..!

இலங்கையில் சீனாவின் கம்யூனிச ஆட்சி வந்தாச்சு..!

Image

மோடிக்கும் தமிழக மீனவர்களுக்கும் ஆபத்து

மிக நீண்ட காலம் யுத்தத்தில் தவித்த இலங்கை மக்கள் இந்த முறை மிகத் தெளிவான நிலைப்பாட்டை தேர்தல் மூலம் கொண்டுவந்திருக்கிறார்கள். கம்யூனிச சிந்தனையுடன் போராடி வந்த அநுர குமார திசநாயக்க அதிக வாக்குகள் பெற்று மக்கள் தலைவராக மாறியிருக்கிறார். இது, இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைக்கு கிடைத்த சம்மட்டி அடி. அதோடு சீனாவின் அதிகாரம் இலங்கையில் வலுப்பெறுவதால் இனி மோடியின் ஆட்டம் எடுபடாது. தமிழக மீனவர்களுக்கும் இனி சிக்கலான காலகட்டமாகவே இருக்கும் என்பது தெரியவந்துள்ளது.

ஏனென்றால் குமார திசநாயக்க இடதுசாரி சிந்தனையாளர். அதனால் இந்தியாவுக்கு, குறிப்பாக பா.ஜ.க.வுக்கும் தொழிலதிபர் அதானிக்கும் எதிரானவர்.  சீனாவின் சிந்தனைக்கு ஆதரவாளர். அதோடு தமிழர் நாடு, தலைவர் பிரபாகன், தனி ஈழம் போன்றவைகளுக்கு எதிரான நிலைப்பாடு உடையவர். அதனாலே இந்த வெற்றியை பா.ஜ.க.வால் தாங்கிக்கொள்ள இயலவில்லை.

அதனாலே, ‘’ஶ்ரீலங்கா – தற்போது கம்யூனிஸ்ட் இயக்கங்களின் தேர்தல் வெற்றி என்பது அந்த நாடு தன்னை மேலும் மோசமான பாதையை நோக்கி நகர்த்து கொள்கிறது என்பதை உணர்த்துகிறது. அத்தோடு பிற நாடுகளின் உள் நாட்டு அரசியலில், சீனாவின் தீர்மானிக்கும் திறன் அதனால் தெற்காசியாவில் ஏற்படவுள்ள நெருக்கடியை உணர்த்தும் முக்கிய நிகழ்வாக இந்த முடிவை பார்க்க முடிகிறது. தமிழகம் முதல் மேற்கு வங்காளம் வரை இங்கேயும் நாட்டின் வெளியில் இருந்து வரும் உத்தரவுகளும், அதனால் ஏற்படும் குழப்பங்களையும் உணர்ந்து செயலாக்கத்தில் ஈடுபட வேண்டியது அவசியம். இதில் யாரையும் விட பாஜக மற்றும் தேசியவாதிகளுக்கு அதிக பொறுப்பும் உள்ளது’’ என்று எச்சரிக்கை செய்கிறார்கள். ஏனென்றால் மோடியின் ஆதரவு பெற்ற ராஜபக்‌ஷே மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார்

இலங்கை மக்கள் தெளிவான முடிவு அளித்திருக்கிறார்கள். அதாவது நெருக்கடியான பொருளாதார சூழலில் இருந்து நாட்டையும் தங்கள் குடும்ப பொருளாதாரத்தையுமா பாதுகாத்துக் கொள்ள மக்கள் கம்யூனிஸ்ட்களை தான் தேர்வு செய்திருக்கிறார்கள். இனியாவது இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் இணக்கமான அணுகுமுறை அவசியம். அப்போது தான் தமிழர்களுக்க் நன்மை கிடைக்கும்.

Leave a Comment