• Home
  • அரசியல்
  • தியாகம்னா செந்தில் பாலாஜின்னு அகராதியில் மாத்துங்க

தியாகம்னா செந்தில் பாலாஜின்னு அகராதியில் மாத்துங்க

Image

தி.மு.க.வுக்கு நாம் தமிழர் எதிர்க்குரல்

செந்தில்பாலாஜியை தியாகி என்று வர்ணித்து ஸ்டாலின் கொடுத்திருக்கும் வரவேற்பு தமிழகம் முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதையடுத்து தியாகி என்ற சொல்லை ஸ்டாலின் அவமானப்படுத்திவிட்டார் என்று கடுமையாக விமர்சனம் செய்கிறார்கள்.

நாம் தமிழர் கட்சியினர் இன்றைய பதிவுகளில், ‘’முதல்வருக்கு ஒரு பணிவான வேண்டுகோள். இனி நாட்டின் விடுதலைக்காக போராடிய வ.உ.சிதம்பரனார், காமராஜர் , திருப்பூர் குமரன், பாரதியார் போன்ற பல நூறு பேரை தியாகிகள் என அழைக்க வேண்டாம் என அரசாணை போடவும். செந்தில் பாலாஜி தியாகி என்றால், செக்கிழுத்த செம்மல் வ.உ.சி தியாகி இல்லை. தியாகி என்ற சொல் இனி புனித சொல் அல்ல . வசவு சொல் . எனவே தியாகம் என்பதன் “புதிய அர்த்தத்தை (?) “ புரிய வைக்க புது அரசாணை போடவும்’ என்று எதிர்க்கிறார்கள்.

‘’வேலை வாங்கி தருவதாக ஏமாற்றிய பணத்தை சட்டவிரோதமாக பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் போனவரை தியாகி ரேஞ்சுக்கு வரவேற்பதெல்லாம் திமுகவால் மட்டுமே முடியும் !’ என்று கிண்டல் செய்திருக்கிறார்கள்.

இதற்கு உடன்பிறப்புகள், ‘’சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொண்டு சிறையில் இருந்து வெளியே வந்த சசிகலாவை சீமான் சந்தித்து வரவேற்பு கொடுத்தது என்ன வகை தியாகம்?’ என்று கேட்கிறார்கள்.

ஜனநாயகம் கேவலப்படுகிறது.

Leave a Comment