மெரினா கடற்கரையில் எக்கச்சக்க சவால்

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி – 206

உலக கடற்கரைகளில்  இரண்டாவது  நீளமான கடற்கரை,  ஆசியக் கண்டத்தின்  எழில் சார்ந்த கடற்கரை என்றெல்லாம் மெரினா கடற்கரைக்குப் பெருமை உள்ளது. அதனால் சென்னைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு மெரினாவும், மகாபலிபுரமும் பிரதான சுற்றுலா ஸ்தலமாக இருக்கின்றன. வெளி நாடு, வெளி மாநிலம், வெளி மாவட்டம் என சென்னைக்கு வருபவர்கள் யாராக இருந்தாலும் மெரினா கடற்கரையில் இருந்து கலங்கரை விளக்கம் வரையிலும் நடை போட்டு மகிழ்வார்கள்.

மேயராக சைதை துரைசாமி பொறுப்புக்கு வந்த பிறகே, தமிழக அரசின் பொதுப் பணித் துறை  நிர்வாகத்தின்  கீழ் இருந்த மெரினா கடற்கரை, மாநகராட்சி நிர்வாகத்திற்கு மாற்றப்பட்டது. எனவே, மெரினா கடற்கரையை முழுமையாக அழகுபடுத்துவதற்குத் திட்டமிட்டார். மெரினா கடற்கரையில் இருந்து பட்டினப்பாக்கம் வரையிலும்  நடைபாதைக் கடைகள், மீன் விற்பனை, ஆக்கிரமிப்பாளர்கள் என பல்வேறு விஷயங்கள் எந்த முறைப்படுத்தலுக்கும் கட்டுப்படாமல் இருந்தன. இவையெல்லாம் சுற்றுலாப் பயணிகளுக்கு இடையூறாக இருந்தது மட்டுமின்றி கடற்கரையின் அழகையும் கெடுத்தன.

மெரினா கடற்கரையை முழுமையாக மாற்றி பொலிவூட்டும் பணியின் முதல் சீர்திருத்தம் எங்கிருந்து மேற்கொள்வது என்ற யோசனையுடன் அந்த பகுதியை முழுமையாக ஆய்வு செய்தார். அப்போது, காமராஜர் சாலையின் இடதுபுறம் சின்னாபின்னமாகக் கிடப்பதைப் பார்த்து அதிர்ந்தார்.

அகில இந்திய வானொலி நிலையம் தொடங்கி சிவானந்தா சாலை வரையிலும் மேற்குப்புறம் 150 ஆண்டுகளுக்கு முன்பு கருக்கல் மற்றும் வார்ப்பு இரும்புகளால் கட்டப்பட்டிருந்த புராதனமான மதிற்சுவர் சிதிலமடைந்து அருவருப்பாகக் காட்சியளித்தது. இதே சாலையின் வலது புறம் சிலைகள், பூஞ்செடிகள், அழகூட்டும் கட்டுமானங்கள் என அலங்கரிக்கப்பட்டு இருந்தாலும் இடது புறம் மட்டும் எவ்விதமான சீரமைப்பும் இல்லாமல், அதன் தொன்மை குலைந்துக் கிடந்தது சைதை துரைசாமிக்கு அதிர்ச்சியை மட்டுமின்றி ஆச்சர்யத்தையும் கொடுத்தது.  

ஏன் தெரியுமா..?

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment