கள்ளு குடிக்கலாமா..?

Image

போராட்டம் நடத்துறாங்க

கள் விற்பனையை அனுமதிக்க வேண்டும் என்று விழுப்புரம் பகுதியில் போராட்டம் நடத்திவருகிறார்கள். மது விற்பனை குறைந்துவிடும் என்பதால் அரசு இதற்கு அனுமதி மறுத்துவருகிறது. இந்த நிலையில் கள் தேசிய பானம் என்றும் கள்ளு குடிப்பதால் உடலுக்கு ஆரோக்கியம் என்றும் தெரிவிக்கிறார்கள்.

கள்ளுக்கு ஆதரவாகப் பேசுபவர்கள், ‘’கள் என்பது பனை மரத்தில் இருந்து மட்டும் எடுக்கப்படுவது அல்ல. தென்னை மரம், அத்தி மரம், அரச மரம், ஈச்ச மரம், வேப்பிலை மரம் என பல வகை மரங்களில் இருந்தும் கூட கள் இறக்கப்பட்டுள்ளது என்பதை சங்க இலக்கியங்கள் உரைக்கின்றன. இவ்வளவு ஏன், சப்பாத்திக்கள்ளியில் இருந்தும் கூட கள் எடுக்கப்பட்டுள்ளது.

பனை மரத்து கள்ளால் ஆண்களுக்கு உடல் வலிமையையும், விந்து சக்தியும் அதிகரிக்கும் என அகத்தியர் குணப்பாடம் கூறுகிறது. தீரும் நோய்கள்: கள்ளு குடிப்பதனால் தீராத வலிகள், அழல் நோய்கள், இரத்தப்போக்கு, கரப்பான் ஆகிய நோய்களை தீர்க்க முடியும். குறிப்பாக அத்தி மரத்தில் இருந்து எடுக்கப்படும் கள்ளை குடித்து வந்தால் இறுதி வாழ்நாள் வரை இளைமையாகவே வாழ முடியும் என குறிப்பு கிடைக்கிறது. தாய்ப்பாலுக்கு இணையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த கள் தமிழர்களின் வரலாற்றில் கற்பக விருட்சம் ஆகும்.

உலக நாடுகளுள் உள்ள 100 நாடுகளில் இன்னும் கள் பருகுவது நடப்பில் உள்ளது. ஏன் இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் கூட கள் குடிக்கிறார்கள். ஆனால் தமிழனின் பாரம்பரிய பானமான கள் தமிழ்நாட்டில் மட்டும் இல்லை. சட்டங்களை போட்டு தடை செய்திருக்கிறார்கள்’’ என்று பொங்குகிறார்கள்.

இது குறித்து மருத்துவர்கள், ‘’கள்ளுக்கும் மதுவுக்கும் பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை. அளவுக்கு மீறி குடிப்பதால் மட்டுமே ஆபத்து தருகிறது. கள்ளு மலிவானது என்பதால் பலரும் அதிகம் குடித்து அதிக சிக்கலுக்கு ஆளாவதுண்டு. இந்த பானங்கள் எதுவுமே மனிதருக்குத் தேவையானது அல்ல’’ என்கிறார்கள்.

Leave a Comment