இப்படி துரோகம் செய்யலாமா ஸ்டாலின்..?

Image

டங்க்ஸ்டன் சுரங்க உண்மையைப் புட்டு வைக்கும் எடப்பாடி பழனிசாமி

தமிழர்களை முட்டாளாக்க நினைக்க வேண்டாம் என்று டங்க்ஸ்டன்  துறைமுகம் விவகாரத்தில் முக்கிய தகவலை அம்பலப்படுத்தியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அதாவது, சுரங்கம் தோண்டுவதற்கு அனுமதி கேட்டு ஸ்டாலின் கொடுத்த விண்ணப்பத்தின் அடிப்படையிலே ஏலம் விட மத்திய அரசு முன்வந்திருக்கும் உண்மை வெளியாகியுள்ளது.

இது குறித்துப் பேசும் அதிமுகவினர், ‘’இரண்டு நாட்களுக்கு முன் பாதுக்க்கப்பட்ட வேளாண் மண்டலமாக முந்தைய அதிமுக ஆட்சியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சட்டப்பேரவையில் நிறைவேற்றி கவர்னர் அனுமதி பெற்று அரசு கெஜட்டில் வெளியிட்டு பாதுகாத்ததை, திமுக ஐ.டி.விங் அதை மத்திய அரசுக்கு அனுப்பவில்லை என்று திமுக ஐ.டி.விங் ராஜீவ் காந்தி,திமுக செய்தி தொடர்பாளர் வக்கீல் சரவணன் அண்ணாதுரை, போன்றோர் ஒரு பொய்யை தெரிவித்து ட்ரெண்டு ஆக்கினார்கள்.

அதிமுக ஐ.டி.விங் முதற்கொண்டு முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் வரை ஊடகங்களை சந்தித்து அது பொய் என்பதை நிரூபித்தனர். அதற்கு பின்னால் ஏதோ ஒரு சதி திமுக அரசு செய்கிறது என நடுநிலையாளர்கள் பலர் சந்தேகித்தனர். அதன் உண்மை இப்பொழுது தெரிய வந்துள்ளது.

அதாவது டங்க்ஸ்டன், மாலிப்டினம் கனிமங்களுக்கான் சுரங்கத் தொழிலை மேற்கொள்ள மத்திய அரசு முதலில் கேட்கவில்லை அதை தமிழக அரசின் மாநில இயற்கை வளத்துறை தான் மத்திய அரசிடம் அனுமதி கோரி 2023 ஆம் ஆண்டு கடிதம் அனுப்பியுள்ளது.

அதன்படி, சென்னை:  மாலிப்டினம் மற்றும் டங்ஸ்டன் ஆகிய இரண்டு முக்கியமான கனிமங்களை வெட்டி எடுக்க மத்திய அரசிடம் மாநில இயற்கை வளத்துறை அனுமதி கோரியுள்ளது.. இரண்டு கனிமங்களுக்கான சுரங்கங்களை உருவாக்க கூட்டு முயற்சிகளை மாநில அரசு எதிர்பார்க்கிறது. மாநிலம் ஹைட்ரஜன் மையமாக மாறுவதில் மாலிப்டினம் முக்கியப் பங்காற்ற முடியும், அதே சமயம் டங்ஸ்டன் ஆற்றல் சேமிப்புக்கு உதவும் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தியாவின் மாலிப்டினம் தாது வைப்பு சுமார் 19.29 மில்லியன் டன்கள். இவற்றில், தமிழகத்தில் 9.97 மில்லியன் டன் தாது இருப்பு உள்ளது. இது நாட்டிற்கு அதிக பொருளாதாரம் ஈட்டக் கூடிய கனிமமாக அடையாளம் காணப்பட்டுள்ளது. அணுசக்தி துறை, ஏவுகணை மற்றும் விமான பாகங்களை தயாரிப்பதிலும் பயன்படுத்தப்படுகிறது; அதேபோல் மதுரை மாவட்டத்தில் டங்ஸ்டன் கிடைக்கிறது. இது பூமியில் இயற்கையாகக் காணப்படும் ஒரு அரிய உலோகமாகும், இது மற்ற தனிமங்களுடனான கலவையுடன் சேர்ந்து மட்டுமே காணப்படுகிறது மற்றும் நாட்டிற்கு அதிக பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த கனிமமாக மத்திய அரசாங்கத்தால் அடையாளம் காணப்பட்டது. டங்ஸ்டனை லித்தியம்-டங்ஸ்டன் ஆக்சைடு பேட்டரிகள் தயாரிப்பில் பயன்படுத்தலாம், இவை அனைத்தும் அதிக ஆற்றல் சேமிப்பு திறன் மற்றும் மேம்பட்ட நிலைத்தன்மையை வெளிப்படுத்துகின்றன. இன்னும் திமுக அரசு தமிழக மக்களை முட்டாள் ஏமாளிகள் என நினைத்தால் 2026ல் தமிழக மக்கள் தக்க பாடம் கற்றுக் கொடுப்பார்கள்’’ என்று கொதிக்கிறார்கள்.

தி.மு.க. ஆய்வாளர்களே உண்மையைப் பேசுங்கள்.

Leave a Comment