அவசியமா தெரிஞ்சுக்கோங்க
அழகு சாதன பொருளாக பெரும்பாலானோர் பயன்படுத்துவது டால்கம் பவுடர். இது டால்க் என்ற வேதிப்பொருளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. இந்த டால்கம் பவுடர். சருமத்தில் இருக்கும் அதிகப்படியான ஈரப்பதத்தை உறிஞ்சிக்கொள்ளும் தன்மை கொண்டது. சருமத்தினிடையே எங்கேனும் உராய்வு இருந்தால் குறைக்கும். இந்த டால்கம் பவுடர் இப்போது பல வகைகளில் பேபி பவுடர்,பாடி பவுடர், ஃபேஸ் பவுடர் என்று கிடைக்கிறது.
நம் உடலில் இருந்து எண்ணெய்ப்பசை வெளியேறிக் கொண்டே இருக்கிறது.அந்த எண்ணெய் பிசுபிசுப்பையும், அதிகப்படியான ஈரப்பதத்தையும் கட்டுப்படுத்த டால்கம் பவுடர் பயன்படும். கோடைக் காலத்தில் வியர்க்குரு போன்ற தொந்தரவுகள் உண்டாகும்போது அதைச் சமாளிக்கவும் இந்த டால்கம் பவுடரை பயன்படுத்தலாம். அக்குள், தொடையிடுக்கு போன்ற இடங்களில் ஏற்படும் உராய்வைத் தவிர்க்க டால்கம் பவுடர் பயன்படும். டால்கம் பவுடரால் சுவாசம் மற்றும் நுரையீரலில் சிறிய அலர்ஜி வரலாம். குழந்தைகளின் பிறப்பு உறுப்பு பகுதியில் கண்டிப்பாக பயன்படுத்த வேண்டாம். எப்போதும் குறைவாக பயன்படுத்துவது நல்லது.
பிறப்பு உறுப்பு பகுதியில் பயன்படுத்தினால் தேவையில்லாத கொடிய பாதிப்புகள் வரலாம். எனவே எச்சரிக்கையாக இருங்கள், பவுடரை தள்ளி வையுங்கள்.