• Home
  • சட்டம்
  • ஆன்லைன் மூலம் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேள்வி கேட்கலாமா..?

ஆன்லைன் மூலம் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேள்வி கேட்கலாமா..?

Image

சட்டத்தில் சந்தேகம் தீர்க்கிறார் வழக்கறிஞர் நிலா

பஞ்சாயத்து முதல் பாராளுமன்றம், குடியரசுத் தலைவர் அலுவலகம்வரை ஒரு தனி மனிதனுக்கு வரும் சந்தேகத்தைத் தீர்க்கும் வகையில் வெளிப்படையாக விளக்கங்களைக் கொடுப்பது தான் தகவல் அறியும் உரிமைச் சட்டம்.

தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தகவல் அறிவதற்காக நாம் தனியாக எந்த விண்ணப்பத்தையும் நிரப்ப வேண்டியது இல்லை. சாதரணமாக ஒரு வெள்ளை தாளில் சம்பந்தப்பட்ட துறையின் பொது தகவல் அலுவலர், தகவல் அறியும் உரிமைச்சட்டம் என குறிப்பிட்டு நம் சந்தேகத்தை அனுப்பினால் போதும்.  இதற்கு பத்து ரூபாய் விண்ணப்ப கட்டணம் அஞ்சல் தலையின் மூலமாகச் செலுத்தினால் போதும்.

இந்த கடிதத்துக்கு 30 நாட்களுக்குள் தகவல் அனுப்பப்படும். ஒருவேளை அப்படி தகவல் கிடைக்கப் பெறவில்லை என்றால், முதல் மேல் முறையீடு செய்ய வேண்டும், அப்படிச் செய்தால் 30 நாள்களுக்குள் பதிலளிக்க வேண்டும். அப்படியும் பதில் கிடைக்காத பட்சத்தில், சென்னை, மாநில தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கான ஆணையத்திலும், டெல்லி, மத்திய ஆணையத்திலும் மேல் முறையீடு செய்யலாம். அனைத்து தகவல்களையும் கண்டிப்பாக தரவேண்டும் என்று கேட்க முடியாது. ராணுவம், நீதிமன்றம், வெளியுறவுத் துறை போன்றவைகளில் பதில் கிடைக்காது.

இப்போது ஆன்லைன் மூலமாகவும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தகவல்கள் கிடைப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. rtionline.gov.in என்ற இணையதளத்தில் கணக்கு உருவாக்கிக் கொண்டு, விண்ணப்பத்தை டவுன்லோடு செய்து கேள்விகள் கேட்கலாம். ஆன்லைன் மூலமாக விண்ணப்பக் கட்டணத்தைக் கட்ட வேண்டியிருக்கும்.

Leave a Comment