ஞானகுரு பதில்கள்
கேள்வி : அறிவுரை அள்ளித்தருபவர்களிடம் பணம் கேட்டால் பதறுகிறார்களே..?
- சு.முத்துராஜ், ஆர்.ஆர்.நகர்.
ஞானகுரு :
பணம் என்பது தனிப்பட்ட மனிதர்களின் சொத்து. உழைத்தோ அல்லது குடும்பம் மூலமோ அவருக்குக்க் இடைத்த பணத்தை கேட்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை. எனவே, உழைத்து அல்லது யாசித்து மட்டுமே பணத்தை பெற வேண்டும்.
கேள்வி : மனைவி சொல்லை மந்திரமாக கடைப்பிடிக்க நினைக்கிறேன், சரியாக இருக்குமா..?
- பி.சிவசுப்பிரமணியன், காந்திநகர்.
ஞானகுரு :
தாய், தந்தை, ஆசிரியர், மனைவி என யார் என்ன சொன்னாலும் அதனை மந்திரமாக பெற்றுக்கொள்வதில் தவறு இல்லை. ஆனால், அவற்றை தெளிவாக ஆய்வு செய்து, சரியானதை மட்டுமே கடைபிடிக்க வேண்டும். அதுவே, மனிதருக்கு அழகு. யாராவது ஒருவர் சொல்வதை முழுமையாக அப்படியே ஏற்றுக்கொள்பவரை அடிமை என்றுதான் சொல்ல வேண்டும்.
