குப்பை சேகரிப்புக்கு பங்கர் சிஸ்டர்

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி – 306

சென்னையின் முக்கியமான சுற்றுலா பகுதிகளை மேம்படுத்துவதற்கு எத்தனை ஆர்வம் எடுத்துக்கொண்டாரோ, அதே ஆர்வத்துடன் குப்பை கொட்டும் வளாகத்தையும் நவீனமாக்குவதற்குத் திட்டமிட்டார் மேயர் சைதை துரைசாமி. கொடுங்கையூர், பெருங்குடி குப்பை சேகரிப்பு வளாகங்களை முழுக்க முழுக்க சுற்றிப் பார்த்தார். அதனாலே அங்கு என்னவெல்லாம் சீர்திருத்தம் தேவை என்பது புரியவந்தது.

கொடுங்கையூர், பெருங்குடி குப்பை வளாகங்களில் ரோடு போட்டு, சிசிடிவி கேமரா பொருத்தி, கண்காணிப்புக் கோபுரம் நிறுவி, குப்பை லாரிகள் கண்காணிப்பைக் கூர்மைப்படுத்தினார். இதனால் குப்பை சேகரிப்பில் இருந்த சிக்கல்கள் தீர்க்கப்பட்டன. அதோடு, பங்கர் முறையில் கொடுங்கையூர் மற்றும் பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தை நவீனமாக்குவதற்கு விரும்பினார்.

பங்கர் முறையில் குப்பைகள் எல்லாமே பூமிக்கு அடியில்தான் சேகரிக்கப்படும். இதற்கு 25 ஏக்கர் மட்டும் நிலம் இருந்தாலே போதும். மீதமுள்ள இடங்களில்  குப்பைகளை மோல்டு செய்து, பசுமைப் பூங்கா, விளையாடு மைதானம் போன்றவை  அமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு விடப்படும்.

லாரியில் இருந்து குப்பை பங்கருக்குள் கொட்டப்பட்டதும், குப்பைகள் இனம் பிரிக்கப்பட்டு மின்சாரம் மற்றும் உரம் தயாரிப்பதற்குப் பிரித்து அனுப்பப்படும். அதனால் பங்கர் நிரம்பி வழிந்துவிடும் என்ற பேச்சுக்கே இடமில்லை. பங்கர் சிஸ்டத்தில் குப்பை மேலாண்மை நடைபெறத் தொடங்கினால் சிறிதளவு குப்பை கூட கண்ணுக்குத் தெரியாமல் மறைக்கப்பட்டுவிடும். குப்பை வளாகத்தை ஒரு தொழிற்சாலை போன்றும், பசுமைப் பூங்காவாகவும் மாற்றுவதற்கு ஆசைப்பட்டார் மேயர் சைதை துரைசாமி.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment