புரூஸ் லீ சிக்ஸ்

Image

வாழ்க்கைப் பாடங்கள்

திரைப்பட நடிகர் மட்டுமல்ல, புரூஸ் லீ ஒரு தத்துவ ஞானி. 20ஆம் நூற்றாண்டின் மிகச்சிறந்த தற்காப்புக் கலை வல்லுநர்களில் ஒருவர். அவர் தனது திரைப்படங்களின் மூலமாகவும் வாழ்க்கை முறையின் மூலமாகவும் வெற்றிக்கான பாதைகளைக் காட்டியிருக்கிறார். ஆறு விஷயங்களே தன்னை வெற்றி அடைய வைத்தன என்று மனம் திறந்து பேசியிருக்கிறார்.

  1. உழைப்பே மந்திரம்

திறமையை விட உழைப்பு மீது நம்பிகை வைத்தார் புரூஸ் லீ.  கடின உழைப்பின் மூலமாகவே வெற்றி பெற்றதாகக் கூறினார். திறமையை மெருகேற்ற அவர் தினமும் பல மணி நேரம் பயிற்சி செய்தார். எதை அடைய விரும்பினாலும், அதற்காக கடினமாக உழைக்க வேண்டும். பெரிதாக அடைய வேண்டும் என்றால் மிகப்பெரிதாக உழைக்க வேண்டும் என்கிறார் புரூஸ்லீ.  

  • உங்களை நம்புங்கள்

தனது திறமைகளை ஆழமாக நம்பினார் புரூஸ்லீ. தன்னால் நிச்சயம் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையே அவரை வெற்றியை நோக்கி ஓட வைத்தது. திடமான நம்பிக்கை இருப்பவரால் எதை வேண்டுமானாலும் சாதிக்க முடியும். சாதனைக்கு எல்லையே இல்லை என்பதே புரூஸ்லீ வாக்கு.

  • கத்துக்கிட்டே இருங்க

புரூஸ் லீ தன் வாழ்நாள் முழுவதும் புதிய விஷயங்களைக் கற்றுக்கொண்டே இருந்தார். உலகின் அத்தனை தற்காப்பு கலைகளையும் கற்றுக்கொள்ள ஆசைப்பட்டார். திறமை உள்ள நபர்களை எல்லாம் தேடிப்பிடித்துக் கற்றுக்கொண்டார். எதையும், எந்த வயதிலும் கற்றுக்கொள்ளலாம் என்பதற்கு உதாரணமாக வாழ்நாள் முழுவதும் கற்றுக்கொண்டே இருந்தவர் புரூஸ்லீ.

  • மனசும் உடம்பும் ஆயுதம்

வெற்றிக்கு உடல் மற்றும் மன ஆரோக்கியம் மிகவும் முக்கியம் என்பதில் புரூஸ் லீ மிகவும் கவனமாக இருந்தார். உடலையும், மனதையும் வலுப்படுத்த ஆரோக்கியமான உணவுகளை உண்டார், தியானம் செய்தார். நன்றாகத் தூங்கினார். உடல் மற்றும் மன ஆரோக்கியம் இரண்டுமே ஒன்றோடொன்று இணைந்தவை. இதில் ஒன்று இல்லாமல் மற்றொன்றை சிறப்பாக வைத்திருப்பது சாத்தியமில்லாதது என்பதை எல்லோருக்கும் கற்பித்தார்.

  • அமைதியே முக்கியம்

தனது கோபத்தைக் கட்டுப்படுத்துவதே கலையின் முழுமை என்பதை கற்றுக்கொண்டார் புரூஸ்லீ. அவரை அத்தனை எளிதில் கோபப்படுத்திவிட முடியாது. எப்படிப்பட்ட சூழலிலும் அமைதியாக இருப்பதற்கு அவரால் முடியும் எனும் அளவுக்கு தன்னடக்கத்தைக் கடைபிடித்து வந்தார். நம்மை கட்டுப்படுத்திக் கொள்ள கற்றுக்கொண்டால் நாம் வாழ்க்கையில் பல சாதனைகளை செய்ய முடியும் என்று பாடம் சொல்லிக் கொடுத்தார்.  

  • புகழை தள்ளி வையுங்கள்

மிகப்பெரும் வெற்றிகள் பெற்ற பிறகும் அவர் புகழுக்கு அடிமை ஆகவில்லை. தன்னுடைய கனவுகளை நிறைவேற்றுவதை நோக்கி மட்டுமே ஓடிக்கொண்டு இருந்தார். அவருக்கு வசதியான வாய்ப்புகளை மட்டுமே தேர்வு செய்தார். சினிமா வெற்றிக்கும் எனக்கும் பெரிய சம்பந்தமில்லை என்று விலகியே இருந்தார் புரூஸ்லீ.

Leave a Comment