சீமானை எப்படியாவது கூட்டிட்டு வாங்க

Image

எடப்பாடியிடம் கெஞ்சும் நிர்வாகிகள்

மக்களவைத் தேர்தல் தோல்வி குறித்து ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. ‘யாரும் ஒருங்கிணைப்பு குறித்து பேசக் கூடாது’ என்று முன்கூட்டியே நிர்வாகிகளிடம் கூறப்பட்டிருந்தது. அதனால் அத்தனை பேரும் வலுவான கூட்டணியின் அவசியம் குறித்து வலியுறுத்தினார்கள்.

சசிகலா, தினகரன், பன்னீர் ஆகியோர் இல்லாமல் தமிழகத்தின் தென் பகுதியில் வெல்ல முடியாது. பாட்டாளி மக்கள் கட்சியை கூட்டணியில் சேர்த்தாலும் அவர்களுக்கு தென் பகுதியில் செல்வாக்கு இல்லை. அதனால், எல்லா தொகுதிகளிலும் நல்ல வாக்கு வங்கி வைத்திருக்கும் சீமானை எப்படியாவது கூட்டணிக்குள் கொண்டுவாருங்கள் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.

சீமான் இதுவரை எங்கேயும் எடப்பாடி பழனிசாமி குறித்து தவறாகப் பேசியது இல்லை என்றாலும் அவர் கிட்டத்தட்ட சசிகலாவின் ஆதரவாளராக இருக்கிறார். ஆகவே, சசிகலா குறித்து சீமான் பேசவில்லை என்றால் அவருடன் கூட்டணி வைக்கலாம் என்ற முடிவுக்கு எடப்பாடி பழனிசாமி வந்திருக்கிறார்.

இது வரையிலும் சீமான் யாருடனும் கூட்டணிக்கு வரவில்லை என்றாலும், ‘தி.மு.க. ஆட்சிக்கு வரக்கூடாது’ என்ற ஒற்றைக் கொள்கையில் சீமான் உறுதியாக இருப்பதால், அதை வைத்து சரிக்கட்டிவிடலாம் என்று நம்புகிறார் எடப்பாடி பழனிசாமி.

தி.மு.க. கூட்டணியில் இருந்து விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ் கட்சிகளை வெளியேற்றுவதற்கு எடப்பாடி பழனிசாமி செய்த முயற்சிகள் தோல்வி அடைந்திருக்கும் நிலையில், சீமானை சரிக்கட்ட முடியுமா என்பது மில்லியன் டாலர் கேள்வி.

Leave a Comment