நெரிசலைக் குறைப்பதற்குப் பாலங்கள்

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி  – 262

பெருநகர சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கு எத்தனை வழிகள் இருக்கின்றனவோ, அத்தனை வழிகளையும் மேயர் சைதை துரைசாமி சிறப்புற பயன்படுத்தினார். ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலை விரிவாக்கம், புதிய சாலைகள் உருவாக்கம், சாலைகளை செவ்வனே செப்பனிட்டு சீர் செய்தது, இடையூறு இல்லாத பேருந்து நிறுத்தங்கள் என்று பல்வேறு புதுமைகள் செய்வதுடன் நில்லாமல், பாலங்கள் கட்டுவதிலும் அதிக கவனம் செலுத்தினார்.

பாலம் கட்டுவது என்றதும் அவசரப்பட்டு முடிவு எடுப்பது மேயர் சைதை துரைசாமியின் பாணி அல்ல. செய்வதை திருத்தமாகவும், தெளிவாகவும், நிறைவாகவும் செய்யவேண்டும் என்ற கொள்கை உடையவர். எனவே, புதிய பாலங்கள் கட்டுவது என்று முடிவெடுத்ததும் அவசரப்படவில்லை.

முதலில் பாலம் கட்டுவதற்குத் திட்டமிடும் பகுதியில் வசிக்கும் மக்களை நேரில் சந்தித்து கருத்துகளைக் கேட்டறிவதற்கு முக்கியத்துவம் கொடுப்பார். ஏனென்றால் அந்தப் பகுதி மக்களுக்குத்தான் பாலத்தின் உண்மையான தேவையும், அந்தப் பகுதியில் உள்ள சிக்கல்களும், அதற்குத் தெளிவான தீர்வுகளும்  தெரியும். அதனால் ஒவ்வொரு பாலம் கட்டுவதற்கு முடிவெடுக்கும்போதும், அந்தப் பகுதி மக்கள் மற்றும் பொதுநலச் சங்கங்களிடம்  முழுமையாக ஆலோசனை செய்தார்.

பாலத்தின் தேவையை அந்தப் பகுதி மக்கள் உறுதி செய்த பிறகும் உடனடியாக பாலம் கட்டுவதற்கு மேயர் சைதை துரைசாமி உத்தரவு பிறப்பிக்க அவசரப்படுவதில்லை. குறிப்பிட்ட பகுதியில் பாலம் அமைப்பது குறித்து பல்வேறு துறை வல்லுநர்கள், ஐ.ஐ.டி. பேராசிரியர்கள், உயர் அதிகாரிகள் ஆகியோரிடம்  ஆலோசனை  செய்வது வழக்கம்.  பாலம் கட்டுவதற்கு ஒருமித்த கருத்து எட்டப்பட்ட பிறகே, பாலம் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்கு  ஏற்பாடுகள் செய்வார். அதனால் தான் மேயர்  சைதை துரைசாமி காலத்தில் கட்டப்பட்ட பாலங்கள் மீது இதுவரை எந்தப் புகாரும் யாரும் தெரிவித்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment