மலிவு விலை உணவகத்திற்கு புளூபிரின்ட்

என்ன செய்தார் சைதை துரைசாமி – 510

புதிதாக எந்த ஒரு திட்டம் என்றாலும் வேலைப்பளு காரணமாக அதிகாரிகள் முடிந்த வரையிலும் தள்ளிப்போட்டு செயல்படுவதைத் தடுப்பார்கள் என்பதை மேயர் சைதை துரைசாமி நன்கு புரிந்துகொண்டார்.

முதல்வர் ஜெயலலிதா அனுமதி கொடுத்த பிறகும் மலிவு விலை உணவகம் கொண்டுவருவதற்கு அதிகாரிகள் தாமதம் செய்வதற்கு என்ன காரணம் என்று யோசித்தார். முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேரில் பேசி எளிதாகப் புரிய வைத்துவிட்டார். ஆனால், அதிகாரிகளுக்கு மலிவு விலை உணவகம்  திட்டம் குறித்து போதிய புரிதல் இல்லை என்பதை உணர்ந்துகொண்டார் மேயர் சைதை துரைசாமி.

இனியும் தாமதம் செய்தால் இந்த திட்டத்தைக் கொண்டுவர முடியாமல் போய்விடலாம் என்று நினைத்த சைதை துரைசாமி, அவராகவே  அடுத்தகட்ட நடவடிக்கையில் இறங்கினார். அதாவது அதிகாரிகள் செய்யவேண்டிய பணிகளை சைதை துரைசாமியே செய்யத் தொடங்கினார்.

மலிவு விலை உணவகம் எப்படி நடத்த வேண்டும் என்பதை அனைவரும் பக்காவாக புரிந்துகொள்ளும் வகையில் ஒரு புளூபிரின்ட் தயார் செய்தார்.  அதில் மலிவுவிலை உணவகம் அமைப்பு  எப்படி அமையவேண்டும் என்று வடிவமைப்பு தயார் செய்தார்.  சமையலறை, விற்பனைக்கூடம், சாப்பிடும் இடம், ஸ்டோர் ரூம், குப்பை அகற்றுதல், கட்டணம் வசூல் உள்ளிட்ட  ஒவ்வொன்றும் எப்படி அமைய வேண்டும் என்று சைதை துரைசாமி துல்லியமாக வடிவமைப்பு செய்தார்.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment