சூப்பர் நகைச்சுவை
’’கள்ள நோட்டு அடிச்சு நீ எப்படி போலீஸ்ல மாட்டினே?’’
’’ரிசர்வ் பேங்க் கவர்னர் கையெழுத்து போடுற இடத்துல, சுப்பிரமணின்னு என் கையெழுத்தை போட்டுட்டேன்!’’
………….
’’நடை பயணத்தை ஒரே நாளில் ரத்து செய்தது ஏன் தலைவரே?’’
’’ஒத்தையிலே நடந்து போக பயமா இருந்துச்சு அதான்.’’
……………
’’டாக்டர் எனக்கு டி.வி. கனவா வருது டாக்டர்…’’
’’கனவுதானே வருது… அதனால என்ன?’’
’’இல்லை டாக்டர்… இடைஇடையே இந்த கனவை உங்களுக்கு வழங்குபவர்கள்ன்னு விளம்பரமும் வருதே… அதை மட்டும் நிறுத்த முடியுமான்னு பாருங்களேன்…”
……………………
’’பணம் சம்பாதிப்பது எப்படின்னு புக் எழுதினீங்களே, அதை ஏன் இன்னும் வெளியிடலை?’’
’’அதை வெளியிட காசுக்குதான் அலைஞ்சிக்கிட்டே இருக்கேன்…”
……………
’’டீ குடிச்சதும் ஏன் உங்க டம்ளரை கழுவறீங்க?’’
’’டிபன் சாப்பிட்டு காசில்லைன்னா, மாவட்டறதில்லையா, அது மாதிரிதான் இதுவும்’’
………………………
’’அப்பாங்கிற மரியாதை இல்லாம என் முன்னாலேயே தண்ணி போடறியா?’’
’’நான் அமைதியா உன் பின்னாலதான் குடிச்சேன். நீ ஏன் திரும்பிப் பார்த்தே..?’’