– பரதநாட்டிய வகுப்புகள் ஆரம்பம்
மதுரை உயர் நீதிமன்ற வழக்கறிஞராகத் திகழும் நிலா, சென்னையில் ஞானகுரு நாட்டியாலயா மூலம் பல பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு பரதநாட்டியம் கற்றுக்கொடுத்தவர். தஞ்சை மற்றும் கலாஷேத்ரா பாணி நடனம் கற்றுத் தேர்ந்தவர்.
தற்போது மதுரையில் ஞானகுரு நாட்டியாலயா மூலம் பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு ஆன்லைன் மற்றும் நேரடி வகுப்புகள் தொடங்குகிறார். கலாஷேத்ரா பாணியில் நடனம் கற்றுக்கொடுக்கப்படும்.

கலாச்சாரப் பங்களிப்பைத் தாண்டி கச்சிதமான உடலமைப்பு, ஆரோக்கியம், ஒருங்கிணைந்த மனம், அதீத நம்பிக்கை, ஒருமுகப்படுத்தும் தன்மை ஆகியவை நாட்டியம் மூலம் ஒவ்வொரு நபருக்கும் கிடைக்க வேண்டும் என்பதையே ஞானகுரு நாட்டியாலயாவின் நோக்கமாகக் கொண்டிருக்கிறார்.
பரதநாட்டியத்தை ஒரு மகிழ்ச்சியான அனுபவமாக கற்றுக்கொள்ள வாருங்கள். முன்பதிவு ஆரம்பமாகிறது.
வகுப்புகள் : சனி மற்றும் ஞாயிறு
இடம் : எஃப்.எஃப்.4, த பிளஸ்டு அபோடு அபார்ட்மெண்ட், 3, ஜவஹர் ரோடு, சொக்கிகுளம், மதுரை – 625002.
தொடர்புக்கு : 72997 53999, 9840903586