• Home
  • சினிமா
  • சினிமா பிரியர்களுக்கு ஒரு நல்ல புத்தகம்

சினிமா பிரியர்களுக்கு ஒரு நல்ல புத்தகம்

Image

உலகை உலுக்கிய 75 திரைப்படங்கள் – எம்.நிர்மல்

சினிமா என்பது 3 மணி நேர சொர்க்கம்.

இந்த விஞ்ஞான யுகத்திலும் மக்களுக்கு மகிழ்ச்சி தரும் கலைகளில் முதல் இடத்தில் இருப்பது திரைப்படம். இதற்கு காரணம் என்னவென்றால் சினிமா என்பது ஒரு தனி நபரின் படைப்பு அல்ல. கதை, இசை, வசனம், பாடல், ஆடல், காட்சியமைப்பு, நடனம், நடிப்பு, சண்டை, ஆடை அலங்காரம் என்று பல்வேறு கலைகளின் சங்கமம். அதனால் எந்த ஒரு சினிமாவிலும் ஏதேனும் ஓரு காட்சி ரசிகனை கட்டிப் போட்டுவிடுகிறது.

சொந்த வாழ்க்கையின் சுக, துக்கங்களை மறந்து வேறு ஓர் உலகத்தில் மனிதரை சஞ்சரிக்கச் செய்யும் சூட்சுமம் சினிமாவுக்கு மட்டுமே இருக்கிறது. நகைச்சுவை படத்தைப் பார்க்கும்போது குலுங்கிச் சிரிக்கிறான். சோகத்தில் கண் கலங்குகிறான். பழி வாங்கும் படங்களில் ரசிகனுக்கும் ரத்தம் சூடேறுகிறது. சினிமா பார்க்கையில்  தானும் ஒரு பாத்திரமாகவே ஒன்றிப் போகிறான். அதனாலே உலகம் முழுக்க மனிதர்களை ஒன்றிணைக்க சினிமாவால் முடிகிறது.

நாடு, இனம், மொழி, மதம், ஜாதி என அத்தனை எல்லைக்கோடுகளையும் கடந்து ஒட்டுமொத்த உலக மக்களையும் கவர்ந்த அட்டகாசமான 75 திரைப்படங்களைத் தேர்வு செய்து பட்டியல் போட்டிருக்கிறார் ஆசிரியர். சினிமாவை காதலிக்கும் ஒவ்வொரு நபரும் இந்தப் படங்களைத் தவறவிடக் கூடாது என்பதே ஆசிரியரின் விருப்பம். பட்டியலில் உள்ள திரைப்படங்களின் சிறப்புகளைப் படியுங்கள். அந்தப் படங்களைத் தேடிப் பிடித்து ரசியுங்கள். நண்பர்களுக்கு இந்த புத்தகத்தையும் சினிமாக்களையும் பரிந்துரை செய்யுங்கள்.

இந்த வாழ்க்கை மகிழ்ச்சியாக வாழ்வதற்கே படைக்கப்பட்டுள்ளது என்பதை நம்புங்கள். குறைந்த செலவில் அதிக மகிழ்ச்சி தரும் சினிமாவைக் கொண்டாடுவோம்.

ஆசிரியர் : எம்.நிர்மல்

பதிப்பகம் : ஞானகுரு பதிப்பகம்

பக்கம்    : 440

விலை   : ரூபாய் 500

பணம் மற்றும் முகவரி அனுப்ப வேண்டிய செல்போன் எண்.9840903586

ஞானகுரு பதிப்பகம் கணக்கிலும் பணம் அனுப்பலாம்.

GYANAGURU PUBLICATION, UNION BANK OF INDIA,  IFS CODE : UBIN0554847

Current Accout No. 548401010050639

Leave a Comment