• Home
  • அழகு
  • அழகு தரும் வைட்டமின்கள்

அழகு தரும் வைட்டமின்கள்

Image

டிரை செஞ்சு பாருங்க

உடல் ஆரோக்கியத்துக்கு வைட்டமின்கள் மிகவும் அவசியம் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். ஆரோக்கியத்துக்கு உதவும் வைட்டமின்கள்தான் அழகுக்கும் உதவுகிறது என்கிறார்கள்.

குறிப்பாக,  ஒவ்வொரு வைட்டமினுக்கும் உடலைக் கட்டுப்படுத்தும் பல்வேறு வேலைகள் இருக்கின்றன. இதனால் ஒன்று குறைந்தாலும் சமநிலை இழப்பு ஏற்படும். மேலும் பி வைட்டமின்கள் நீரில் கரையக் கூடியவை. அதாவது உடலில் அவற்றை சேகரித்து வைக்க முடியாது. இதனால் வைட்டமின் பி பொருள்களை தினசரி சாப்பிட வேண்டியது ரொம்ப அவசியம்.
குறிப்பாக  தோலையும் கூந்தலையும் ஆரோக் கியத்துடன் வைப்பதற்கு இந்த வைட்டமின்கள் மிகவும் முக்கியமானவை. உடலின் செல்களைப் பராமரிப்பதற்கான ஆற்றலைத் தருவதற்குத் தேவையான கலோரிகளைப் பெற பி வைட்டமின்கள் உதவுகின்றன. இறந்த செல்களை மாற்றுவது, சருமத்தை இளமையாகவும், மிருதுவாகவும் வைத்திருக்க உதவும் எண்ணெயை உற்பத்தி செய்வது போன்ற செயல்பாடுகளுக்கு இந்த வைட்டமின்கள் உதவுகின்றன.

இதுதவிர, வேறு என்னென்ன வைட்டமின்கள் அழகுக்கு எப்படி உதவுகிறது, அவை எதன் மூலம் கிடைக்கிறது என்பதையும் பார்க்கலாம்.

வைட்டமின் பி1 :

இது ஆக்ஸிஜனேற்றத்தை தடுத்து சமநிலைப் படுத் துகிறது. சிறுவயதிலேயே முதிர்ந்த தோற்றம் அடைவது தடுக்கப்படும். சிவப்பு அரிசி, கோதுமை, ஈஸ்ட், ஓட்மீல், சோயா பீன்ஸ், முந்திரியில் இவை கிடைக்கிறது.

வைட்டமின் பி2 : 

உடலின் மெட்டபாலிக் செயல்பாடு களுக்கு இது அவசியம். தோலில் உள்ள செல்கள் உட்பட, உடலின் எல்லா செல்களும் இதனால் புதுப்பிக்கப்படும். பால், முட்டைகள், இறைச்சி, கல்லீரல், தானியங்கள், பச்சை காய்கறிகளில் இவற்றை பெறமுடியும்.

வைட்டமின் பி3 : செல் மெட்டபாலிசம், கார்போ ஹைட்ரேட் கிரகிப்புக்கு இது அவசியம். இதனால் ஆற்றல் கிடைப்பதோடு, இறந்த செல்கள் அழிக்கப்பட்டு புதிய செல்களும் உருவாகும்.  மீன், கோழி இறைச்சி, கோதுமை, சிவப்பு அரிசியில் இந்த வைட்டமின்கள் அதிகம் உள்ளது.

வைட்டமின் பி5 : 

இது அழற்சியைத் தடுக்கும், கொழுப்பு உடைதலை வேகமாக்கி, பருக்கள் உருவாவதைத் தடுக்கும்.  மக்கா சோளம், முட்டை, சீஸ், இறைச்சி, பிராக்கோலி, தக்காளியில் இந்த வைட்டமின்கள் உள்ளன.

வைட்டமின் பி6 : 

தோலின் எண்ணெய் பசை மிக்க பகுதிகளில் செதில் உரியும் நோயை சரிசெய்ய உதவுகிறது. முழு தானியங்கள், கல்லீரல், பயறுகள், வாழைப்பழம் போன்றவைகளில் இந்த வைட்டமின்கள் உள்ளன.

வைட்டமின் பி7 : 

கூந்தல் வளர்ச் சிக்கான வைட்டமின். வைட்டமின் ஹெச் எனப்படும் இது சருமம், நகங்கள், கூந்தல் வளர்ச்சிக்கு உதவுகிறது. இவற்றை  பயறு வகைகள், பழங்கள், காய் கறிகள், முட்டைகள், சீஸ் போன்றவைகளில் இருந்து பெற முடியும்.

வைட்டமின் பி9 : 

ரத்த சிவப்பு அணுக்கள் உருவாகி, முதிர்வடைந்து, பெருகுவதற்கு இது அவ சியம். சருமம், கூந்தலின் ஆரோக்கியத்துக்கும் முக்கியம், இளநரையைத் தடுக்கவும் உதவுகிறது. இவை  ஆஸ்பராகஸ், பசலைக் கீரை, ஈரல், ஆரஞ்சு ஜூஸ், கருஞ்சீரகத்தில் கிடைக்கிறது.


வைட்டமின் பி12 :

 மெட்டபாலி சத்தை வேகப்படுத்து வதுடன், சரும செல்லை புதுப்பிக்கிறது.
முட்டை, கோழி, தயிர், பால், பயறு ஆகியவற்றில் இதை பெற்றுக்கொள்ளுங்கள். இந்த வைட்டமின் பி மட்டும் இருந்தாலே போதும், எல்லோரும் அழகிதான்.

Leave a Comment