• Home
  • அழகு
  • மழை நேரத்திற்கு அழகு பராமரிப்பு..!

மழை நேரத்திற்கு அழகு பராமரிப்பு..!

Image

சிம்பிள் டிப்ஸ்

மழை காலம் அற்புதமானது. ஆனால், மேக்கப் போட்டு வெளியே செல்லும் பெண்களுக்கு இது தொந்தரவு தரக்கூடியது. எப்போது, எந்த அளவில் பெய்யும் என்பது தெரிவதில்லை. அழகாக மேக்கப் போட்டு செல்லும் நேரத்தில், திடீரென மழை பெய்து நனைந்துவிட்டால் மேக்கப் காணாமல் போய்விடும். அது மட்டுமின்றி, சருமத்திற்கும் பாதிப்பு ஏற்படும்.

அதனால்தான், பெண்கள் மழையைக் கண்டாலே பயந்துபோய் குடையை எடுப்பார்கள். ஆனாலும், விட்டு வைக்குமா மழை..? பெண்களை மிரட்டும் மழைக் காலத்திலும் அழகும் புத்துணர்ச்சியும் வேண்டுமா? இதோ சில சிம்பிள் குறிப்புகள்.

  • மழை காலத்தில் பலரும் அடிக்கடி முகத்தை கழுவுவதில்லை. இது தவறு. தூசி, அழுக்குகள் அதிகம் படியும் இடம் முகம். எனவே, முதலில் முகத்தை நன்றாகக் கழுவ வேண்டும். பின், கிளென்சர் பயன்படுத்தி முகத்தை சுத்தப்படுத்தி விட்டு, ஐஸ் கட்டிகள் வைத்து, முகத்தில் 10 முதல் 15 நிமிடங்கள் தேய்க்க வேண்டும். இது முகத்தில் அதிகமாக வியர்ப்பதைக் குறைக்க உதவுவதோடு, நாம் போடும் மேக்-அப் கலையாமல், புதிதாக வைத்திருக்க உதவும்.
  • மழை காலத்தில் , மேக்-அப் செய்வதற்கு முன் பவுண்டேஷன் மற்றும் அழகு கிரீம்கள் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். மழை பெய்தால், இவை அனைத்தும் கரைந்துவிடும். தேவைப்பட்டால் தண்ணீ­ரில் கரையாத பவுண்டேஷன்களாக பயன்படுத்தலாம். சிறிதளவு பவுடர் மட்டும் பூசலாம். இந்த காலத்தில் மாய்சரைசர் பயன்படுத்த மறந்து விடாதீர்கள். இவை, தோலில் ஏற்படும் நீர் இழப்பு மற்றும் பரு போன்றவற்றைத் தவிர்க்க உதவும்
  • இயற்கையாகவே வறண்ட தன்மை கொண்ட முகம் உடையவர்களுக்கு, மழைக்காலத்தில் முகம் இன்னும் வறண்டு காணப்படும். அவ்வாறானவர்கள், முட்டையின் மஞ்சள் கருவுடன், ஒரு டீஸ்பூன் பால் கிரீம் மற்றும் சில துளி பன்னீர் சேர்த்து கலந்து முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் பூச வேண்டும். 15 நிமிடங்கள் நன்கு ஊறிய பின் தண்­ணீரால் கழுவ வேண்டும்.
  • கண் அலங்காரத்திற்கு, தண்­ணீரில் கரையாத ஐ லைனர்கள் மற்றும் மஸ்காரா உபயோகிக்க வேண்டும். மழைக்காலத்தில், உதட்டை அலங்கரிக்க, மேட் லிப்ஸ்டிக் தான் சிறந்தது.
  • மழை காலத்தில் பொலிவிழந்த சருமத்தை இளமையூட்டும் தன்மை கடலை மாவிற்கு உண்டு. தினமும் முக அழகிற்கு, கடலை மாவு பயன்படுத்தி வந்தால் நல்ல மாற்றத்தை உணரலாம். கடலை மாவுடன் கொஞ்சம் வெள்ளரி சாறு கலந்து நன்கு குழைத்து பாதிப்பு உள்ள சரும பகுதிகளில் நன்கு பூசவும். பின் இருபது நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி விடவும். சருமம்.
  • கடலை மாவில் சிறிது நீரை கலந்து, முகத்தில் பூசி கொள்ளுங்கள். நன்கு உலர்ந்த பின்பு குளிர்ந்த நீரால் கழுவுங்கள். இவ்வாறு செய்து வருவதனால் முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறையும்.குளிக்கும் போது சோப்பிற்கு பதில் கடலை மாவை பயன்படுத்தி வந்தால், சருமம் வளுவளுப்பாக இருக்கும். கடலை மாவுடன், மஞ்சள் மற்றும் 1 ஸ்பூன் பன்னீர் கலந்து முகத்தில் பூசி கொள்ளுங்கள். பிறகு 20 நிமிடம் கழித்து, முகத்தை கழுவினால் முகம் பளிச் பளிச் என இருக்கும்.
  • கடலை மாவுடன் பாதாம் மாவு மற்றும் எலுமிச்சை கலந்து குழைத்து முகம் முழுவதும் பூசி 30 நிமிடம் அப்படியே விடவும். பிறகு குளிர்ந்த நீரில் கழுவி விடவும். இதன் மூலம் முகம் பளபளப்பாக தோன்றும்.கடலை மாவுடன் சந்தனம், ரோஸ் வோட்டர், தேன் கலந்து முகப்பூச்சு செய்தால் முகத்தில் உள்ள அழுக்குகள், இறந்த செல்கள் வெளியேறுவதுடன் சருமம் மென்மையும் வழுவழுப்பும் கூடும்.
  • பொதுவாக எண்ணெய் சருமம் உள்ளவர்களுக்கு மேக்கப் போட்டாலும் , சிறிது நேரத்தில், முகத்தில் எண்ணெய் மினுமினுக்கத் தொடங்கி, முகம் களையிழந்து விடும். அதனால், எண்ணெய் சருமம் உடையவர்கள், முகத்துக்கு மேக்கப் போடும் முன் ஐஸ் கட்டியை ஒரு காட்டன் துண்டு அல்லது துணியில் சுற்றி முகத்தில் பரவலாக ஒற்றி எடுங்கள்.பிறகு , உலர்ந்த துண்டை பயன்படுத்தி, முகத்தை மிக மென்மையாகத் துடைத்து , முகம் உலர்ந்தபின், உங்களது வழக்கமான மேக்கப்பைத் தொடங்குங்கள். இவ்வாறு செய்வதால், மேக்கப் நீண்டநேரம் கலையாமலும் இருக்கும். எண்ணை பிசுபிசுப்பும் இருக்காது. மழையிலும் பாதிப்பு ஏற்படாது.

இத்தகைய நடவடிக்கை மேற்கொண்டால், மழையை பெண்களும் ரசிக்க முடியுமே.

Leave a Comment