ஆச்சர்ய உண்மைகள்
முதுகு வலி அனுபவிக்காத மனிதர்கள் யாரும் இல்லை. குறிப்பிட்ட காரணங்களால் மட்டுமே முதுகுவலி உண்டாகிறது என்று பலரும் நினைப்பது உண்மையில்லை. வித்தியாசமான காரணங்களாலும் முதுகுவலி ஏற்படலாம்.
தவறான உடற்பயிற்சி அல்லது உடல் நிலை (Posture) அதாவது நீண்ட நேரம் தவறான முறையில் அமர்ந்து பணியாற்றுவது, தவறான நிலையில் நீண்ட நேரம் நிற்பது, தூங்கும் போது தவறான மெத்தையில் தூங்குதல் போன்றவை முக்கிய காரணிகள் என நினைக்கிறார்கள்.
இன்னமும் திடீர் சுமை, தசைகளுக்கு அதிக அழுத்தம், வழக்கமில்லாத வேலை காரணமாகவும் முதுகு வலி உண்டாகலாம். முதுகு மீது அதிக எடை அல்லது அழுத்தம் தருவதும் சிக்கலை உருவாக்கும்.
இது தவிர மனஅழுத்தமும் தசைகளில் இறுக்கத்தை ஏற்படுத்தி முதுகு வலி கொடுக்கலாம். கிட்னியில் கற்கள் இருப்பதும் பெண்களுக்கு வெள்ளைப்படுதல் காரணமாகவும் முதுகுவலி உண்டாகலாம்.
உடல் பருமன் அதாவது கூடுதல் எடை காரணமாக முதுகு வலி உருவாகலாம். பெண்கள் ஹை ஹீல்ஸ் அணிவது கொடூரமான பின்விளைவுகளை உருவாக்குகிறது. இவை எல்லாவற்றையும் விட காயம் அல்லது விபத்து காரணமாக முதுகு வலி உண்டாகிறது.
அவசர வலி நிவாரணியாக சுடுநீர், குளிர் நீர் ஒத்தடம் பயன்படுகிறது. எந்த காரணம் என்றாலும், வலி 2 வாரங்களுக்கு மேல் நீடித்தால் மருத்துவரை அணுகவேண்டியது அவசியம். கால்களில் வலி, மடக்க முடியாத நிலை அல்லது காயம் காரணமாக வலி ஏற்பட்டால் மருத்துவ சிகிச்சை அவசியம்.