என்ன செய்தார் சைதை துரைசாமி – 415
டெங்கு காய்ச்சல் அச்சத்தில் இருந்து சென்னை மக்களை பாதுகாத்து நம்பிக்கை கொடுக்க வேண்டிய கடமையை மிகவும் அக்கறை எடுத்து மேற்கொண்டார் மேயர் சைதை துரைசாமி.
ஆங்கில மருத்துவத்தில் மருந்து இல்லை என்ற தகவல் பொதுமக்களுக்கு ரொம்பவே பயத்தைக் கொடுத்தது. அதோடு டெங்கு காய்ச்சல் குறித்து புரளிகளும் கிளம்பி மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தின. அதாவது, டெங்கு காய்ச்சல் வந்தவர்களுக்கு ஒரு வாரத்தில் குணம் அடையாவிட்டால் உயிருக்கு ஆபத்து என்று ஒரு புரளி பரவியது. இதனை தடுத்து நிறுத்தவேண்டிய கட்டாயமும் மேயர் சைதை துரைசாமிக்கு உருவானது.
சாதாரண மருத்துவப் பரிசோதனை மூலம் டெங்கு கண்டறிய முடியாது என்பதால், வேறு சில காரணங்களால் மரணம் அடைவதற்கும், டெங்குதான் காரணம் என்று நினைத்து மக்கள் பயந்தனர். அதனால் மக்களிடம் டெங்கு பயத்தை குறைப்பதற்கு முதல் கட்டமாக மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு முகாம்கள் நடத்துவதற்கு மேயர் சைதை துரைசாமி ஏற்பாடு செய்தார். டெங்குவைத் தடுப்பதற்கு ஏராளமான பணியாளர்கள் களத்தில் இறங்கி செயல்படத் தொடங்கினார்கள்.
மேயர் சைதை துரைசாமியின் அறிவுறுத்தல்படி, வீடு வீடாகச் சென்று மக்கள் அச்சத்தைத் தீர்க்கும் வகையில் மாநகரப் பணியாளர்கள் செயல்படத் தொடங்கினார்கள்.
- நாளை பார்க்கலாம்.












