ஆறு கேள்விகள்
உடல் அளவில் வலிமையாக இருப்பது மட்டும் இல்லீங்க, உள்ளத்திலும் ஸ்ட்ராங்கா இருப்பவர் மட்டுமே வாழ்க்கையில ஜெயிக்க முடியும், தலைமை இடத்தைப் பிடிக்க முடியும். நீங்க ஸ்ட்ராங்கானவரான்னு தெரிஞ்சுக்க ஆறு வழிகள் இருக்கின்றன.
- நடந்து முடிஞ்ச விஷயம், தோல்வி, துன்பத்திற்கு வலிமையானவங்க ரொம்ப நேரம் கவலைப்பட மாட்டாங்க. .
- புதிய மாற்றம், புதிய சவால் என்றால், அதை ஏத்துக்கிற முதல் ஆளா வலிமையானவங்க இருப்பாங்க.
- நம்மளை மீறி நடக்குறது, கட்டுப்படுத்த முடியாத விஷயங்களுக்ககாக தங்களோட சக்தியை வீணடிக்க மாட்டார்கள்.
- ரிஸ்க் இருப்பது தெரிஞ்சாலும் தைரியமா சில முடிவு எடுப்பாங்க.
- எடுத்த முடிவு தப்புன்னு தெரிஞ்சா, அதுக்கான முழு பொறுப்பையும் வலிமையானவங்க எடுத்துக்குவாங்க. இதுக்கெல்லாம் வேற யாரையும் குற்றம் சொல்ல மாட்டாங்க.
- கடுமையான வேலைப்பளு இருந்தாலும் குடும்பத்திற்கும் போதிய நேரம் ஒதுக்குவாங்க..
இதுல எந்தெந்த குணங்கள் இல்லையோ, அதையெல்லாம் வளர்த்துக்கோங்க… வலிமை வரும், அப்புறம் வெற்றியும் வரும். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.
