டெஸ்ட் பண்ணச் சொன்னால் தள்ளிப் போடுறீங்களா..?

டேக் கேர் ப்ளீஸ்

உடலில் ஏதேனும் பிரச்சினை ஏற்படும்போது, அது தானாகவே சரியாகிவிடும் என்ற எண்ணமே நிறைய பேருக்கு இருக்கிறது. இதற்கு பரிசோதனை செய்வதை வெட்டிச்செலவு என்று நினைக்கிறார்கள். ஏதேனும் ஆபத்தான முடிவு கிடைக்கலாம் என்று சிலர் அஞ்சுகிறார்கள். எனவே முடிந்த வரை பரிசோதனை செய்யாமல் அலட்சியப்படுத்துகிறார்கள்.

நோயை மறைப்பது அல்லது தள்ளிப்போடுவது சரியான தீர்வு அல்ல. ஆரம்ப நிலையில் கண்டுபிடிக்கப்படும் பெரும்பாலான நோய்களுக்கு சிகிச்சை எளிதாகவும் விரைவாகவும் கிடைக்கும். புற்றுநோய், இதய நோய், நீரிழிவு ஆரம்ப கட்டத்தில் கண்டறியப்பட்டால் கட்டுப்படுத்துவது எளிது.

அதேநேரம், பெரும்பாலும் நாட்பட்ட நிலையிலே புற்று நோய் கண்டறியப்படுகிறது. ஏனென்றால், புற்றுநோய்க்கான அறிகுறிகள் ஆரம்ப கட்டத்தில் பெரிதாகத் தென்படுவதில்லை. எனவே புற்றுநோய்க்கு யாரும் பிரத்யேகப் பரிசோதனை செய்வதில்லை.

இந்த பிரச்னைக்கு அமெரிக்காவின் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் புதிய தீர்வு கண்டுபிடித்திருக்கிறார்கள். சாதாரண ரத்தப் பரிசோதனை மூலமே அதாவது ரத்தத்தில் உள்ள டி.என்.ஏ. துகள்களில் ஏற்படும் சிறிய மாற்றங்களை ஆய்வு செய்வதன் மூலம் புற்றுநோயின் தொடக்க அறிகுறிகளை கண்டுபிடிக்க முடியும் என்று நிரூபித்திருக்கிறார்கள்.

இந்த புதிய பரிசோதனை மூலம் அறிகுறிகள் வெளிப்படுவதற்கு முன்பே, புற்று நோயைக் கண்டறிய முடியும். இதனால் சிகிச்சை விரைவாக தொடங்கவும்; உயிர் பிழைப்பதற்கு வாய்ப்பும் அதிகரிக்கும்.

விரைவில் இந்த ரத்தப் பரிசோதனை வழக்கமான மருத்துவப் பரிசோதனைகளில் சேர்க்கப்படுவதற்கு வாய்ப்பு உண்டு என்று கூறப்படுகிறது. இதன் மூலம் புற்றுநோயால் ஏற்படும் மரணங்களை கணிசமாகக் குறைக்க முடியும்.

இனி, புற்று நோய் பற்றி அஞ்சத் தேவையில்லை. முன்கூட்டியே கண்டறிந்து தப்பிக்க முடியும். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.

Leave a Comment