நள்ளிரவு நேரத்தில் பிரியாணி சாப்பிடுறீங்களா..?

உணவுக்கு ஐந்து இலக்கணம்

கண்ட நேரத்திலும் கிடைத்ததை எல்லாம் சாப்பிடுவது மனிதரின் இயல்பாக மாறிவிட்டது. நள்ளிரவு நேரத்திலும் தேடிப் போய் பிரியாணி சாப்பிடுகிறார்கள். பகல் நேரத்தில் பரோட்டா சாப்பிடுகிறார்கள்.

மனிதர்களின் ஜீரண அமைப்பு ரொம்பவே தனித்தன்மை வாய்ந்தது. இதனை பாதுகாப்பதற்கு ஐந்து கட்டளைகளை கடைபிடியுங்கள்.

  1. சாப்பிட்டதும் மளமளவென செம்பு நிறைய தண்ணீர் குடிப்பது நிறைய பேரின் பழக்கம். இது மிகப்பெரிய தவறு. சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிப்பது, நமது வயிற்றில் உணவை ஜீரணிக்கச் சுரக்கும் அமிலங்களை நீர்த்துப் போகச் செய்துவிடும். இதனால் அஜீரணம், வாயுத் தொல்லைகள் ஆரம்பமாகும். அதனால், சாப்பிடுவதற்கு முன் அல்லது சாப்பிட்டு 30 நிமிடங்களுக்குப் பிறகு தண்ணீர் குடிப்பதுதான் சிறந்தது.
  2. சாப்பிட்டவுடன் டீ குடிப்பதால், உணவில் உள்ள இரும்புச்சத்து போன்ற முக்கியமான ஊட்டச்சத்துக்களை உடல் உறிஞ்சுவது தடைபடுகிறது. இது நாளடைவில் ரத்தசோகைக்கு கூட வழிவகுக்கும்.
  3. கழுத்து வரைக்கும் சாப்பிட்டுவிட்டு உடனே படுப்பது  செரிமான செயல்முறையை மிக மோசமாகப் பாதிக்கும். படுக்கும்போது, இரைப்பையில் உள்ள அமிலம் மேல்நோக்கி வந்து நெஞ்செரிச்சலை உண்டாக்கும். இது உடல் பருமன் அதிகரிக்க முக்கியக் காரணம்.
  4. சாப்பிட்டவுடன் புகைபி டிப்பது. மற்ற நேரங்களில் சிகரெட் பிடிப்பதை விட, 10 மடங்கு அதிக தீங்கு விளைவிக்கும். இது செரிமான பிரச்சனைகள் மற்றும் புற்றுநோய் அபாயத்தை நேரடியாக அதிகரிக்கிறது.
  5. சாப்பிட்ட உடனே ஜிம்முக்குக் கிளம்புவதும் ஆபத்தானது. நாம் சாப்பிட்டவுடன், நமது உடலின் ரத்த ஓட்டம் முழுவதும் செரிமான உறுப்புகளுக்குச் செல்ல வேண்டும். ஆனால், நாம் உடற்பயிற்சி செய்யும்போது, ரத்த ஓட்டம் தசைகளை நோக்கித் திரும்பிவிடும். இதனால், ஜீரணம் தடைபட்டு, வயிற்று வலி, வாந்தி போன்ற பிரச்சினைகள் ஏற்படும். சாப்பிட்ட பிறகு குறைந்தது ஒன்றரை முதல் இரண்டு மணி நேரம் கழித்துத்தான் உடற்பயிற்சி செய்வது நல்லது. லேசான நடைப்பயிற்சி செய்யலாம், ஆனால் கடினமான உடற்பயிற்சி கூடாது.

இதுபோன்ற சின்னச்சின்ன மாற்றங்கள் நமது செரிமான அமைப்பைப் பாதுகாத்து, நீண்ட கால ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும். உணவை ரசித்துச் சாப்பிடுங்கள், அதே சமயம், சாப்பிட்ட பிறகு உங்கள் உடலுக்கு ஜீரணம் செய்யத் தேவையான நேரத்தையும், சரியான சூழலையும் கொடுங்கள். ஆரோக்கியம் என்பது நாம் உண்ணும் உணவில் மட்டுமல்ல, நமது பழக்கவழக்கங்களிலும் இருக்கிறது.

Leave a Comment