• Home
  • சர்ச்சை
  • கள்ளச்சாராயத்தில் செத்தவர்கள் தியாகிகளா..?

கள்ளச்சாராயத்தில் செத்தவர்கள் தியாகிகளா..?

Image

டாஸ்மாக்கினால் செத்தவர்களுக்கு எப்போ பணம்

திருட்டுத்தனமாக கள்ளச்சாராயம் குடித்துச் செத்தவர் குடும்பத்திற்கு நிதியுதவி செய்வது கடும் சர்ச்சையாக மாறியிருக்கிறது. இது செத்தவர்களுக்கு இல்லை, அவருடைய குடும்பத்துக்கு என்று தி.மு.க.வினர் சப்பைக்கட்டு கட்டுகிறார்கள்.

டாஸ்மாக் மூலம் குடிப்பது உடல் நலனுக்குக் கேடு என்று அரசு சொல்லிவிட்டுத் தான் அரசு விற்பனை செய்கிறது. டாஸ்மாக்கில் குடித்து ஈரல் கெட்டுப் போய் தினமும் பலர் செத்துக்கொண்டு இருக்கிறார்கள். இவர்களுடைய குடும்பமும் அனாதையாக நிற்கிறதே, அவர்களுக்கும் நியாயம் கிடைக்குதா?

என்ன பிரச்னை நடந்தாலும் காசைக் கொடுத்து வாயை அடைத்துவிடலாம் என்ற சிந்தனைதான் மேட்டிமைத்தனம் என்று பலரும் விமர்சனம் செய்கிறார்கள். பல்வேறு கேள்வி எழுப்புகிறார்கள்.

கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களில் எத்தனை பேர் அவர்கள் குடும்பத்தின் வாழ்வாதாரத்துக்கு பங்களித்து வந்தார்கள் என்கிற புள்ளிவிவரத்தோடு நிவாரணம் அளிக்கப்படுகிறதா?

கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களால் நிராதரவாக நிற்கும் குடும்பங்களுக்கு உதவுவது என்ற நிலையை எடுத்து அரசு 10 லட்சம் தந்தால், தினம் தினம் பல்வேறு காரணங்களுக்காக தன் குடும்பத் தலைவனை இழந்து நிராதரவாக நிற்கும் அத்தனை குடும்பங்களுக்கும் அரசு 10 லட்சம் தருமா?

குடும்பத்துக்கு ஆதரவாக உதவி என்றால் ஏன் இப்படி ஒரேடியாக அள்ளிக் கொடுக்கவேண்டும்? அதற்கு மாறாக, உடனடித் தேவைக்கு ஒரு சிறு தொகையை தந்துவிட்டு, அந்த குடும்பத்தில் பிள்ளைகள் இருந்தால் கல்விச் செலவை ஏற்பது, குடும்பத்தில் யாருக்கேனும் (வேலைக்கு செல்வதற்காக) திறன் மேம்பாட்டிற்கு வழி செய்வது என செய்யலாமே?

தங்கள் கடமை விமர்சனத்துக்கு உள்ளாகும்போது மக்களின் கணக்கில் பணம் போட்டுவிட்டு தப்பிப்பது எந்த வகையில் நியாயம் என்று கேள்வி எழுப்புகிறார்கள். நியாயமான கேள்விகள்.

Leave a Comment