• Home
  • அழகு
  • பொட்டு வைப்பதில் இம்புட்டு விஷயங்களா..?

பொட்டு வைப்பதில் இம்புட்டு விஷயங்களா..?

Image

அழகுக்கு ஆயிரம் வழிகள்

அழகு என்பது பார்ப்பவர் கண்களில் இருக்கிறது என்பார்கள். அகன்ற கண்கள் சில பெண்களுக்குத்தான் அழகாக இருக்கும், குறுகிய உள்ளடங்கிய குறுகிய கண்கள் சிலருக்கு அழகு சேர்க்கும். சிலருக்கு எடுப்பான நாசியும் சிலருக்கு அடங்கிய மூக்கும் அழகின் சின்னங்களாக அமையக்கூடும்.  உயரமான சில பெண்கள் அழகாக இருக்கிறார்கள் என்பது உண்மை. ஆனால் குள்ளமான பெண்களில் கட்டழகி கிடையாதா என்ன? உங்களுக்கு அமைந்திருக்கும் உடல்வாகு உண்மையில் உங்களுக்கு அழகினைத்தான் உண்டாக்குகிறது என்ற உண்மையை உணருங்கள்.

 கவர்ச்சியான உடல் தோற்றம் அழகின் ஓர் அம்சம் என்பது சரி.  அப்படிப்பட்ட உடல் கவர்ச்சி உங்களிடம் இல்லையே என்பதாலேயே நீங்கள் அழகியல்ல என்ற முடிவுக்கு வரவேண்டாம்.  இனிய குரல் அழகின் ஓர் அம்சம். உங்கள் குரல் அழகே பிறரை கவர்ந்திழுக்கும் ஆற்றல் பெற்றிருக்கும். உங்களிடம் குரல் வளம் அமைந்திருந்தால் அதை செம்மைப்படுத்த முயலுங்கள். முறையான இசைப்பயிற்ச்சியினால் உங்கள் குரல் பல்லாயிரக்கணக்கான மக்களை மயக்கச்செய்துவிடும்.

 பகட்டான மேனியழகு இல்லாத பல பெண்களுக்கு கட்டான உடல் அமைந்திருக்கும். இந்த உடற்கட்டும் ஓர் அழகு என அவர்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். உங்கள் உடற்கட்டை காப்பாற்றி வைத்திருப்பதே ஒரு சிறப்புத்தான்.

 உங்களின் நிறம் சிவப்பாக இருப்பது மட்டுமே அழகு என எண்ணவேண்டாம். கறுப்பான உடல் நிறத்துக்கும் ஒருவித கவர்ச்சி உண்டு. கருப்பு நிறம் என்பதற்காக எந்த பெண்ணும் கலக்கமடையத் தேவையில்லை.

 புற அழகு ஏதுமில்லாத சில பெண்களின் அக அழகு அந்த குறைபாட்டைப் போக்கிவிடும். நல்ல குணம், இனிய உரையாடல், உயர்ந்த பண்பு, பிறருக்கு உதவும் சுபாவம், விருந்தோம்பல் ஆகிய இந்த அக அழகிற்கு புற அழகு சமானமே ஆகாது. புற அழகைவிட அக அழகே உயர்ந்து நிற்கும்.

உதாரணத்திற்கு வெறுமனே ஒரு பொட்டு வைப்பதை கலையாக நினைத்து செய்தால், அதுவே அற்புத அழகாக மாறிவிடும்.

பொட்டு வைத்துக் கொள்வது அவரவர் விருப்பத்தை பொறுத்தது. அதனால் பல வகையான வண்ணங்களில் பல வகையான வடிவங்களில் நெற்றிப்பொட்டுகளை வைத்துக் கொள்கிறார்கள். ஆனால் வெவ்வேறு நெற்றி அமைப்பை உடையவர்கள் எவ்வாறான பொட்டுக்களை தேர்ந்தெடுக்கலாம் என்பதை கண்டறிந்து அதன்படி வைத்துக் கொண்டால் அது அழகுக்கு அழகூட்டுவதாக அமையும்.

* விசாலமான நெற்றியைக் கொண்ட பெண்கள் பெரிய பொட்டு வைத்தால் நெற்றியின் அகலம் குறைந்தது போல் அழகாகத் தெரியும்.

 * நெற்றி அகலம் குறைந்தவர்கள் இரண்டு புருவங்களுக்கு இடையில் ஒரு சிறிய பொட்டு வைத்தாலே எடுப்பாக தெரியும்.

* சதுர வடிவிலான முக அமைப்பு கொண்டவர்கள் சற்றுப் பெரிய வட்ட வடிவிலான பொட்டு வைக்க வேண்டும்.

*  வட்ட வடிவிலான முக அமைப்பைக் கொண்டவர்கள் சிறிய, பெரிய, முக்கோணம், வளைவு வடிவம் போன்ற பொட்டுக்களை வைக்கலாம்.

பொட்டு வைப்பதிலேயே இத்தனை விஷயங்கள் இருக்கிறதென்றால், இன்னமும் தலைமுடி, உடை என்று பார்த்துப் பார்த்து செய்தால் எல்லோரும் அழகாகிவிட முடியும் என்பதை நம்புகிறீர்கள்தானே…

Leave a Comment