நடிகைகள் எல்லோரும் தப்பான கேரக்டரா..?

உண்மை இதுதான்

நண்பர்களுடன் அரட்டை அடிக்கும்போது யாராவது ஒரு நடிகையின் பேரைச் சொல்லி, அவர் பகல் நேரத்திலும் மது குடிக்கிறார், சிகரெட் பிடிக்கிறார், கேரவனுக்குள் நடிகருடன் ஜல்சா செய்கிறார் என்று சொல்லுங்கள்.

நீங்கள் சொல்வதை நண்பர் கூட்டம் முழு உண்மை என்றே நம்புவார்கள்.  இதுதான்,  Illusory Truth Effect என்று சொல்லப்படும் மாய உண்மை. அதாவது, நடிகைகள் என்றாலே தவறான நடத்தை கொண்டவர்கள் என்று ஒரு மாய பிம்பம் காலம்காலமாக கட்டமைக்கப்பட்டுள்ளது.

ஆரம்ப காலங்களில் குடும்பப் பெண்கள் சினிமாவில் நடிக்க அனுமதிக்கப்படவில்லை. எனவே, குடும்பத்தை மீறியவர்கள், சமூகத்தை மதிக்காதவர்களே நடித்தனர். அதனால் சினிமாவில் போலவே, நிஜவாழ்விலும் நிறைய ஆண்களுடன் உறவு கொள்வார்கள்  என்ற எண்ணம் திணிக்கப்பட்டது. கிசுகிசுக்கள் எல்லாமே நடிகைகளின் எல்லை மீறல் பற்றியே இருக்கும். அதை கேட்பவர்களுக்கும் கிளுகிளுப்பு கிடைப்பதால், அவை எல்லாமே உண்மை என்றே சமூகம் ஏற்றுக்கொள்கிறது.

அதனால் தான், அந்த நடிகை பற்றி தகவல் உனக்கு எப்படி கிடைத்தது..? நடிகையின் கேரக்டர் அப்படி இல்லை என்று யாரும் சந்தேகப்படுவதில்லை.

உண்மை என்னவென்றால் போலீஸ் துறையில் நல்லவர்கள் இருப்பது போல், நீதிபதிகளில் நேர்மையானவர்கள் இருப்பது போல் சினிமாவிலும் தூய்மையான பெண்கள் இருக்கிறாகள்.

நீங்கள் பொய்யான ஒரு தகவல் பரப்புவதன் மூலம்  குறிப்பிட்ட நடிகையின் வாழ்க்கை, நிதி, உடல், உயிருக்குப் பாதிப்பு வரலாம். எனவே, உறுதி செய்யப்படாத எந்த தகவல்களையும் பரப்ப வேண்டாம். இப்படி செய்தி பரப்புவதற்கு சட்டப்படி தண்டனை உண்டு. எனவே, பொய் மாயையில் மாட்டிக் கொள்ளாதீர்கள். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.

Leave a Comment