கிங் நோய்த்தடுப்பு ஆய்வு நிறுவனத்திற்கு வேண்டுகோள்

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி 420

டெங்கு காய்ச்சலுக்கு சித்த வைத்தியத்தில் இரண்டு மருந்துகள் இருப்பது உறுதி செய்யப்பட்டது என்றாலும், இதனை ஆய்வுக்கு உட்படுத்தி மக்களுக்கு நம்பிக்கை கொடுத்தால் மட்டுமே, எல்லோரும் தைரியமாக பயன்படுத்துவதற்கு முன்வருவார்கள் என்பது மேயர் சைதை துரைசாமிக்குப் புரிந்தது.

எனவே, மக்களுக்கு எப்படி நம்பிக்கை கொடுப்பது என்று ஆலோசனைகள் செய்தார். மக்கள் நம்பிக்கை பெற்ற ஆய்வு நிறுவனம் மூலம் இந்த அறிவிப்பு வெளிவர வேண்டும் என்றதும், அனைவரும் கிங் நோய்த்தடுப்பு ஆய்வு நிறுவனத்தின் பெயரையே சொன்னார்கள்.

ஆகவே, கிண்டியில் உள்ள கிங் நோய்த்தடுப்பு மற்றும் ஆய்வு நிறுவனத்திற்கு நிலவேம்புக் கஷாயம் மற்றும் பப்பாளி இலை சாறு ஆகிய இரண்டும் பரிசோதனைக்கு அனுப்புவதற்கு ஏற்பாடு செய்தார் மேயர் சைதை துரைசாமி. ஆங்கில மருத்துவம் எதையுமே ஆய்வுகளின் முடிவுகள் அடிப்படையில் மட்டுமே ஏற்றுக்கொள்ளும். எனவே, டெங்கு நோய்க்கு எதிராக இந்த இரண்டு மருந்துகளும்  எப்படி செயல்படுகின்றன என்று ஆய்வு செய்து அறிக்கை வெளியிடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

பொதுவாக இதுபோன்ற நடவடிக்கைகளை சுகாதாரத்துறை மூலம் உயர் அதிகாரிகள் மற்றும் மருத்துவர்களே மேற்கொள்வார்கள். ஆனால், மக்கள் மீது இருந்த அக்கறை காரணமாக மேயர் சைதை துரைசாமியே நேரடியாக இந்த நடவடிக்கையில் இறங்கினார். அதோடு, என்ன ரிசல்ட் வரும் என்ற் ஆர்வத்துடன் பள்ளி மாணவன் போன்று காத்திருந்தார்.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment