அன்னபூர்ணா இல்லை அடிமைபூர்ணா

Image

கொங்கு சாதி சண்டை

அன்னபூர்ணா ஹோட்டல் விவகாரத்தில் கிட்டத்தட்ட அத்தனை கட்சிகளும் பா.ஜ.க.வுக்கு எதிர்நிலையை எடுத்துவிட்டன. ஆனால், எடப்பாடி பழனிசாமி மட்டும் இன்னமும் அமைதியாக இருக்கிறார். இந்த அமைதிக்குப் பின்னே சாதி விவகாரம் பற்றி எரியத் தொடங்கியிருக்கிறது.

சமூகவலைதளத்தில் சாதி சண்டை உச்சம் பெற்று நடக்கிறது. அதாவது, கூட்டிட்டு போய் வளைந்து வணங்கி மன்னிப்பு கேட்கவைத்தவர் கவுண்டர் சமுதாயம். மன்னிப்பு கேட்டவர் நாயுடு சமுதாயம். ஜாதிய கட்டமைப்பில், குறிப்பாக கோவையில், யார் யாருக்கு அடிமை என்பது உறுதியாகிறது. இது, வருத்தமான செய்திதான். என்ன செய்ய, அவரவர் அவரவர் ஜாதிக்கு மட்டுமே செயல்படவேண்டும், என்கிற சிந்தனை இருக்கும்வரை, தீர்வு பிறக்காது. அடுத்தமுறை யார் இப்படி அவமானம் படுத்தப்பட்டாலும் அன்னபூர்ணா அடிமைபூர்ணா ஆனதை நினைத்தாவது அத்தகைய செயலை கண்டிப்போம் என்று நாயுடு சமூகத்தினர் கொந்தளிக்கிறார்கள்.

கோவையில் வணிகர் சங்கத்தில் பெரும்பான்மை கவுண்டர்கள் ஆவார்கள். அமைச்சரிடம் கூட்டிக்கொண்டு போய் மன்னிப்பு கேட்கவைத்தவர் கவுண்டர். ஆகையால் கோவையில் வணிகர்கள் அடக்கியே வாசிப்பார்கள். மாநில அளவில் வணிகர் சங்கத்தில் வணிகர்களின் வேறு சமுதாயத்தினர் பெரும்பான்மை. அவர்கள் ‘நம்ம ஏன் இதை பெருசு படுத்துவானே?’ என்று அமைதியே காப்பார்கள்.

அன்னபூர்ணா உரிமையாளர் ஜாதியினர் மட்டும் குரல் எழுப்பி என்ன பயன்? மன்னிப்பை ஏற்றுக்கொண்டவரை விமர்சித்து என்ன ஆக போகிறது? அடிமைப்படுத்தியவர் வேறொருவராச்சே. அவரை விமர்சித்தால் வேறு பகை வரும் என்பதால்தானே அமைச்சரை விமர்சிக்கும் அவலநிலை. மன்னிப்பு கேட்கவைத்தவரை எதுவுமே செய்யமுடியாமல் இருக்கும் இயலாமையின் வலி உணர முடிகிறதா? அவர் ஜாதியினர் கோபப்படாமல் யாரையாவது திட்டிவிட்டால், அது அண்ணபூர்னா உரிமையாளர் இழந்த தன்மானத்தை திருப்பி கொடுத்துவிடுமா??!! கூட்டிக்கொண்டு போய் மன்னிப்பு கேட்கவைத்தவரை அவர் ஜாதியை சேர்ந்தவர் யாராவது விமர்சிக்கிறார்களா என்று விசாரித்து பாருங்கள். உண்மை புரியும். எல்லா மனிதருக்கும் அவமானம் வலிக்கும். நாம் ஜாதிகளாக சிதறுண்டு கிடக்கும்வரை யாருக்காவது அடிமையாகவே இருப்போம் என்று கொதிக்கிறார்கள்.

எடப்பாடி பழனிசாமியின் அமைதியின் காரணமாக சாதி சண்டை நடக்க வாய்ப்பிருக்கிறதா சொல்லப்படுகிறது.

Leave a Comment