• Home
  • அரசியல்
  • தோல்விக்கு ஜாதியினரை கேவலப்படுத்தும் அன்புமணி

தோல்விக்கு ஜாதியினரை கேவலப்படுத்தும் அன்புமணி

Image

அரசியல் அடிப்படை புரியலையே

என் ஜாதிக்காரன் எனக்கு தான் ஓட்டு போடுவான் என்று ஆணவமாக பேசிக்கொண்டு அந்த ஜாதித் திமிரில் தேர்தலை எதிர்கொண்டவர் அன்புமணி ராமதாஸ். மனைவி, மகளை எல்லாம் தெருத்தெருவாக அலையவிட்டு, ஜாதி மக்களிடம் சத்தியம் வாங்கினார்கள்.

ஆனால், இடைத் தேர்தலில் மக்கள் ஒட்டுமொத்தமாக தி.மு.க.வுக்கு வாக்களித்துவிட்டார்கள். தன்னுடைய ஜாதி மக்களை மட்டும் நம்பி நின்றால் இப்படித்தான் நடக்கும் என்பது கூட அன்புமணிக்கு இன்னமும் புரியவில்லை.

தோல்வி ஆங்காரத்தில், ‘எல்லோரும் புடவைக்காக ஓட்டுப் போட்டாங்க, காசுக்காக ஓட்டுப் போட்டாங்க’ என்று சாபம் கொடுத்திருக்கிறார். சொந்த ஜாதியினரை இப்படி அவமானப்படுத்தலாமா அன்புமணி..?

அன்புமணி ஒவ்வொரு தேர்தலில் பெட்டி வாங்கிக்கொண்டு கூட்டணியை மாற்றுகிறார் என்று சொல்லப்படுகிறதே. அது மட்டும் சரியான செயலா?

தேர்தலில் வெற்றி தோல்வி சகஜம். ஆனால், வெறுமனே ஜாதி அரசியல் வெற்றிக்கு உதவாது என்பதை இனியாவது புரிந்துகொள்ளுங்கள். அனைத்து ஜாதி மக்களிடமும் இணக்கமாகச் செல்லாத வரையிலும் பா.ம.க.வுக்கு வெற்றி கிடைக்கப்போவதில்லை, டெபாசிட் வாங்கப் போவதும் இல்லை.

தி.மு.க.வினர் ஒட்டுமொத்தமாக இறங்கினார்கள், பணம் கொடுத்தார்கள் என்றால் அதை நீங்களும் செய்திருக்கலாமே. பணம் கொடுப்பதை யாரும் தடுக்கவில்லையே. இடைத்தேர்தல் அரசியல் சூத்திரம் புரியாமல் கொதிக்கிறார் அன்புமணி.

Leave a Comment