என்ன செய்தார் சைதை துரைசாமி – 407
கள ஆய்வுகள் மற்றும் கலந்தாய்வுகள் செய்வது ஒவ்வொரு மேயரும் வழக்கமாக செய்யும் நடைமுறைதான். ஆனால், சைதை துரைசாமி, மேயராக ஆற்றிய பணிகள் ஆச்சர்யம், வியப்பு தரக்கூடியவை.
ஏனென்றால், ஐந்தாண்டு காலகட்டத்தில் ஒரு மேயரால் இத்தனை செய்யமுடியுமா என்ற கேள்வியை எழுப்பும் வகையில் மேயர் சைதை துரைசாமி மாபெரும் சாதனை படைத்தார். இதை படிக்கையில் நம்புவதற்கு சிரமமாகத் தெரியலாம். ஆனால், இவை எல்லாமே அக் மார்க் உண்மை என்பதை மாநகராட்சிப் பதிவுகளில் எல்லோரும் பார்க்க முடியும்.
கள ஆய்வு மற்றும் கலந்தாய்வுக் கூட்டம் பற்றிய புள்ளிவிபரங்களை அறியும் ஒவ்வொரு நபரும் ஆச்சர்யப்படுவது நிச்சயம். ஏனென்றால், கள ஆய்வு மற்றும் கலந்தாய்வு போன்றவை 1996 – 2001 காலகட்டத்தில் 447 முறை நடந்திருப்பதாக அலுவலகக் குறிப்புகள் உள்ளன.
அடுத்தபடியாக 2006 – 2011 காலகட்டத்தில் 790 முறை நடந்துள்ளன. இதையடுத்து மேயர் சைதை துரைசாமியின் காலம். அதாவது 2011 முதல் 2016 வரையிலான சைதையாரின் காலத்தில் நடந்த கள ஆய்வு மற்றும் கலந்தாய்வுக் கூட்டத்தின் எண்ணிக்கை 10,123 ஆகும்.
நம்புவதற்கு சிரமப்படும் அளவுக்கு இத்தனை பணிகள் செய்து மாபெரும் சாதனை படைத்திருக்கிறார் மேயர் சைதை துரைசாமி. இந்தியாவிலேயே மேயர் சைதை துரைசாமி அளவுக்கு செயலாற்றிய மேயர் வேறு யாருமே இல்லை என்று உறுதிபடக் கூற முடியும். அன்றும் இன்றும் என்றும் சைதை துரைசாமி மட்டுமே நம்பர் ஒன்.
- நாளை பார்க்கலாம்.












