பிளாஸ்டிக் கழிவு அகற்றிய ஆம்ஃபிபியன் வாகனம்

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 98

ஆகாயத் தாமரையை அழிப்பதற்கு ஆம்ஃபிபியன் வாகனம் வாங்குவதற்கு பெருநகர சென்னை மேயர் சைதை துரைசாமி உறுதியாக இருந்ததற்கு, இன்னொரு முக்கிய காரணமும் இருந்தது.

அதாவது, உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்துவதற்கு நீதிமன்றங்கள் தடை விதித்திருந்தன. ஆகாயத் தாமரை இலையை அகற்றுவதற்கு மனிதர்கள் பயன்படுத்தப்படும் நேரத்தில், காலில் வேர்கள் சிக்கிக்கொள்வதற்கும், அதனால் அவர்கள் உயிருக்கு ஆபத்து வரவும் வாய்ப்பு இருக்கிறது. ஆகவே, அனைத்து சாதக அம்சங்களையும் ஆராய்ந்து பார்த்த பிறகே பெருநகர சென்னைக்கு ஆம்ஃபிபியன் வாகனம் வாங்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.

2 கோடி ரூபாய்க்கும் அதிக விலை என்பதற்கு எழுந்த எதிர்ப்புகளை சமாளித்து, அந்த ஆம்ஃபிபியன் வாகனத்தை சென்னைக்கு வாங்கி வருவதற்கு சைதை துரைசாமிக்கு நான்காண்டு காலம் பிடித்தது. வேறு ஒரு மேயராக இருந்தால் எதிர்ப்புகள் கிளம்பியதும், அந்த யோசனையைக் கைவிட்டிருப்பார்கள். ஆனால், சைதை துரைசாமியின் சென்னையின் நலனுக்காக உறுதியாக நின்று அந்த வாகனத்தை வாங்கினார்.

ஆம்ஃபிபியன் வாகனம் வாங்கப்பட்டதும் முதல் கட்டமாக சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அடையாறு, கூவம், கெனால், ஓட்டேரி நல்லா மற்றும் கேப்டன் காட்டன் பக்கிங்காம் கால்வாய் போன்ற 21 நீர்நிலைகளிலும் கிட்டத்தட்ட 200 கி.மீட்டருக்கு ஆகாயத் தாமரைகளும், நீரில் மிதந்த தேவையற்ற பிளாஸ்டிக் குப்பைகளும் அகற்றப்பட்டன. அதனால் நீர்நிலைகள் பாதுகாக்கப்பட்டதுடன், கொசு உற்பத்தியும் ஓரளவு குறைக்கப்பட்டது.

இந்த வாகனம் அகன்ற கால்வாய்க்குள் சென்று ஆகாயத் தாமரைகளை அப்புறப்படுத்துவதுடன், நீரோட்டத்தைத் தடை செய்யும் வகையில் ஓரங்களிலும் நடுவிலும் வளர்ந்திருக்கும்  செடி கொடிகள், புதர்கள், மண்மேடுகள் ஆகியவற்றை நீக்கவும்  பயன்படுத்தப்பட்டது.  மேலும் நீர்நிலைகளின் உட்பகுதியில் படிந்திருக்கும் களிமண் , உடைந்த கற்கள், பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றவும் தூர் எடுக்கவும் பயன்பட்டது

இந்த வாகனத்தின் சிறப்பான செயல்பாட்டை நேரில் பார்த்தபிறகே, பலரும் சைதை துரைசாமியின் தொலைநோக்குப் பார்வையைப் பாராட்டினார்கள்.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment