என்ன செய்தார் சைதை துரைசாமி – 384
மேயர் சைதை துரைசாமி சைதாப்பேட்டையில் நடத்திவந்த மலிவு விலை உணவகத்தையே, அம்மா உணவகம் என்று தமிழக மக்கள் அனைவரும் பயன் அடையும் வகையில் மாற்றினார் என்பது எல்லோரும் அறிந்த தகவல். அதேபோன்று, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நேரடியாகப் பயன் அடையும் வகையில் வாரச்சந்தை கொண்டுவர வேண்டும் என்பது மேயர் சைதை துரைசாமியின் கனவாக இருந்தது.
விவசாயப் பொருட்களை அடிமாட்டு விலைக்கு வியாபாரிகள் வாங்குகிறார்கள். அதே பொருட்களை மக்களுக்கு அதிக லாபம் வைத்து விற்பனை செய்கிறார்கள். இதனால் விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் பயன் தரும் வகையில் வாரச்சந்தை என்ற திட்டத்தை யோசித்தார். இதன் மூலம் விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்கும். அதே நேரத்தில் பொதுமக்களுக்கு இயற்கைப் பொருள் குறைவான விலையில் கிடைக்கும்.
எந்த ஒரு திட்டம் என்றாலும், அது குறித்து பல்வேறு நபர்களிடம் ஆலோசனை பெற்று, குறிப்பிட்ட துறை வல்லுனர்களின் கருத்து அறிந்து செம்மையாகத் திட்டமிடுவார். அந்த திட்டம் எந்த வகையில் செயல்படும், எத்தனை பேருக்குப் பயனளிக்கும் என்று முழுமையாக செயல்திட்டம் வகுப்பார். அந்த வழியில் அம்மா வாரசந்தைக்கும் ஒரு செயல்திட்டம் உருவாக்கி, அதனை முதல்வர் ஜெயலலிதா பார்வைக்குக் கொண்டுபோனார்.
அந்த செயல்திட்டத்தைப் பார்வையிட்ட அன்றைய முதல்வர் ஜெயலலிதா வியப்பின் உச்சிக்கே போய்விட்டார். ‘எப்படி சைதை, உங்களால் மட்டும் புதுமையாகவும் மக்களுக்குப் பயனுள்ள வழியிலும் சிந்திக்க முடிகிறது? நீங்கள் கொண்டுவரும் ஒவ்வொரு திட்டமும் மக்களுக்குப் பெருநன்மை வழங்குவதாகவே இருக்கிறது. எனவே, இதனை நிறைவேற்றிவிடலாம்’’ என்று வாக்கு கொடுத்தார்.
முதல்வர் ஜெயலலிதா வாக்கு கொடுத்தார் என்றாலும், பல்வேறு காரணங்களால் அவரது காலத்தில் அம்மா வாரச்சந்தை செயலுக்கு வரவில்லை. மேயர் சைதை துரைசாமி கொண்டுவர திட்டமிட்ட வாரச்சந்தை எப்படி இருந்தது தெரியுமா..?
- நாளை பார்க்கலாம்.