அமெரிக்காவில் அம்மாஸ் கிச்சன்

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 66

அம்மா உணவகத்தின் வெற்றி மற்ற மாநிலங்களிலும் எதிரொலிக்கத் தொடங்கியதால், அதே பாணியில் பல மாநிலங்களில் மலிவு விலை உணவகத்தைத் தொடங்கின. ஒடிசாவில் ஆஹார் என்ற பெயரில் (ஆஹார் என்றால் ஆகாரம், உணவு என்று பொருள்) ஒடிசா முதல்வர் நவீன் பட் நாயக் மலிவு விலை உணவகத்தை தொடங்கிவைத்தார்.

இந்தத் திட்டத்தின் கீழ் அரிசி சாதம், ‘தல்மா’ எனப்படும் பருப்பு மற்றும் காய்கறிகள் சேர்த்து  5 ரூபாய்க்கு  அளிக் கப்படுகிறது. ஒடிசாவின் புவனேஸ்வர், கட்டாக், ரூர்கேலா, பர்ஹாம்பூர், சம்பல்பூர் போன்ற  ஐந்து நகரங்களில் முதல் கட்டமாக 21 உணவகங்கள் தொடங்கப்பட்டன.  இந்த உணவகத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பைத் தொடர்ந்து, மேலும் பல்வேறு நகரங்களில் உணவகம் விரிவுபடுத்தப்பட்டது.

  • உத்தராகண்ட் மாநிலத்தில்,  ‘இந்திரா அம்மா உணவகம்’ என்ற பெயரில் மலிவு விலை உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளன.
  • தெலங்கானாவில் ஹைதராபாத் மாநகராட்சி சார்பில் மலிவு விலையில் அதாவது 5 ரூபாய்க்கு  மதிய உணவு அளிக்கும் திட்டம் 30 மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
  • டெல்லியில் உள்ள குடிசைப்பகுதி, தொழிற்சாலைகள் மற்றும் கல்லூரி பகுதிகளில், ஆம் ஆத்மி கேன்டீன் தொடங்குவதற்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடங்கினார்.

இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்கள் அம்மா உணவகத்தைப் பின்பற்றிய நிலையில், பிற நாடுகளுக்கும் இந்த பெருமை பரவியது.  இதற்கு உதாரணம் அம்மாஸ் கிச்சன். ஆம், அம்மா உணவக பாணியில், அம்மாஸ் கிச்சன் என்ற பெயரில் நியூஜெர்சி, புளோரிடா, டெக்சாஸ் ஆகிய 3 இடங்களில் தினேஷ்குமார் என்பவர் மலிவு விலை உணவு விடுதி நடத்தத் தொடங்கினார்.  ஒட்டல் மேனேஜ்மெண்ட் படித்த இவர், அமெரிக்காவில் வாழும் தமிழர்களுக்காக  இந்த உணவு விடுதியை  தொடங்கினார்.  

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment