அம்மா உணவகத்துக்கு வழி காட்டிய மலிவுவிலை உணவகம்

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 61

அம்மா உணவகத்தில் இட்லி 1 ரூபாய், தயிர் சாதம் 3 ரூபாய், சப்பாத்தி இரண்டுக்கு 3 ரூபாய் என்றெல்லாம் விலை நிர்ணயம் செய்வது எப்படி சாத்தியமானது என்ற கேள்வி பலருக்கும் எழுந்தது.

இதற்கு வழி காட்டியது, சைதை துரைசாமி சைதாப்பேட்டையில் நடத்திவந்த மலிவு விலை உணவகம். ஆம், 2006ம் ஆண்டு மனிதநேய இலவச ஐ.ஏ.எஸ். பயிற்சி அறக்கட்டளை சார்பாக தொடங்கப்பட்ட மலிவு விலை உணவகத்தின்  விலைப் பட்டியலைத் தான் அம்மா உணவகத்திற்கும் நிர்ணயம் செய்ய வேண்டும் என்பதில் சைதை துரைசாமி உறுதியாக இருந்தார்.

எனவே, இந்த விலைப்பட்டியலை முதல்வர் ஜெயலலிதாவிடம் எடுத்துக் காட்டி, விளக்கம் கூறி ஒப்புதலும் பெற்றார். இந்த விலைப்பட்டியல் காரணமாகவே அம்மா உணவகத்தின் புகழ் காட்டுத் தீ போன்று தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுக்க மளமளவென பரவியது.

அம்மா உணவகத்தில் உணவு தரமாக இருப்பது மட்டுமின்றி அங்கு வழங்கப்படும் குடிநீரும் தரமாக இருக்க வேண்டும் என்பதில் மேயர் சைதை துரைசாமி மிகவும் உறுதியாக இருந்தார். அதனால், அங்கு வரும் மக்களுக்கு  சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி செய்து தரப்பட்டது.

சுவையான உணவு, சுகாதாரமான சுற்றுச்சூழல், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், சீருடை அணிந்த பணியாளர்கள் என்று ஒரு ஹைடெக் ஹோட்டல் போலவே அம்மா உணவகம் செயல்படத் தொடங்கியது. சைதை துரைசாமி மேயராக இருந்த காலத்தில் 407 அம்மா உணவகங்கள் செயல்பட்டன. இவற்றின் மூலம் தினமும் 3.5 லட்சம் முதல் 4 லட்சம்  எளிய மக்கள் பசியை போக்கிக் கொண்டனர்.

 சென்னை மாநகராட்சி அறிக்கைபடி, சென்னையில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மக்களில் சுமார்  20 சதவீதத்தினர்  அம்மா  உணவகம்  மூலம் நேரடியாகப் பலன் அடைந்தனர்.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment