200 கடைகளுடன் அம்மா வாரச்சந்தை

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி – 385

அம்மா உணவகம் போன்று அம்மா வாரச்சந்தை என்ற திட்டத்தைச் செயல்படுத்தி விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் நிறைவான பொருட்கள் கிடைப்பதற்கு மேயர் சைதை துரைசாமி திட்டமிட்டார். இதற்கான செயல்திட்டத்தைப் பார்த்துவியந்த முதல்வர் ஜெயலலிதா மனதாரப் பாராட்டியது மட்டுமின்றி உடனடியாகத் தொடங்குவதற்கு ஊக்கமளிக்கவும் செய்தார்.

பல்வேறு காரணங்களால் இந்த திட்டம் உடனடியாக செயலுக்கு வரவில்லை. அதேநேரம் இந்த வாரச்சந்தையின் திட்ட அறிக்கையைப் பார்த்த பலரும் பாராட்டினார்கள். அதன்படி, வாரச் சந்தைகள் அமைப்பதற்குத் திட்டமிடப்பட்டன. அதன் அடிப்படையில் 15 வாரச் சந்தைகளை ஒருங்கிணைக்கவும், நிர்வகிக்கவும் வேளாண் விற்பனை துறையில் உள்ள வேளாண்மை அலுவலருக்கு இணையான அலுவலர்களை நிர்வாகிகளாக நியமனம் செய்யப்பட வேண்டும் என்று விரும்பினார்.

ஒவ்வொரு வாரச்சந்தையிலும் 200 கடைகள் அமைக்கப்பட வேண்டும் என்று திட்டமிடப்பட்டது. இந்த வகையில் ஒவ்வொரு கடையும் 20 அடிக்கு 20 அடி அளவில் அரேபியன் டென்ட் முறையில் அமைக்கப்படும். இந்த ஒரு அரேபியன் டென்ட்டிற்குள் 10க்கு 10 அடி அளவில் 4 கடைகள் வைக்க முடியும் என்று திட்டமிட்டார். இந்த 20 அடிக்கு 20 அடி என ஒரு டென்ட் அமைப்பதற்கு உத்தேசமாக 35 ஆயிரம் ரூபாய் ஆகும் என்று கணக்கிட்டிருந்தார். அந்த வகையில் ஒவ்வொரு கடை அமைப்பதற்கும் 8,750 ரூபாய் செலவாகும். இந்த வகையில் 200 கடைகளுக்கும் சேர்த்து 17 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவாகும்.

இதுதவிர, 250 விலையில் 160 எல்.டி.டி. விளக்குகளுக்கு 40 ஆயிரம் ரூபாய். 500 ரூபாய் செலவில் 200 ஸ்டீல் டேபிள், சேர் என்றால், 1 லட்சம் ரூபாய். மக்களை கவரும் வகையில் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் நான்கு பிரிவுகளில் கிராமியக் கலை நடத்தப்பட வேண்டும் எனவும் திட்டமிட்டார்.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment