என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 60
பெருந்தலைவர் காமராஜரின் மதிய உணவுத் திட்டம், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் சத்துணவுத் திட்டம் போன்றவை மாணவர்களின் பசி தீர்ப்பது மட்டுமின்றி அவர்களை பள்ளிக்கு வரவழைக்கும் திட்டமாக இருந்தன. அந்த திட்டங்கள் காரணமாகவே இன்று தமிழகம் கல்வியில் சிறந்த மாநிலமாக விளங்குகிறது.
புரட்சித்தலைவி ஜெயலலிதா காலத்தில் மேயர் சைதை துரைசாமியால் கொண்டுவரப்பட்ட அம்மா உணவகம் ஏழை, எளிய மக்கள் அனைவரது பசியும் தீர்க்கும் வகையில் செயல்பட்டது. அம்மா உணவகத்திற்கு கூலித் தொழிலாளிகள், ஆட்டோ ஓட்டுநர்கள், கட்டிடத் தொழிலாளர்கள், பாரம் சுமப்பவர்கள், விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர்கள், வெளி மாநிலத்தில் இருந்து சென்னைக்கு வரும் உழைப்பாளிகள், வேலை தேடும் இளைஞர்கள், திரைப்பட வாய்ப்புக்கு அலையும் கலைஞர்கள் என ஏராளமான வாடிக்கையாளர்கள் இருந்தனர்.
இதன் வெற்றிக்கு முக்கிய காரணம் விலைப்பட்டியல். ஆம், அம்மா உணவகத்தின் விலைப்பட்டியலை இறுதி செய்தவர் மேயர் சைதை துரைசாமி. எந்த ஒரு நபரும் இந்த விலைப்பட்டியலைக் கேட்டாலே நம்புவதற்குக் கடினமாகத்தான் இருக்கும்.
அம்மா உணவக விலைப்பட்டியல்
இட்லி (1) = 1 ரூபாய்
பொங்கல் = 5 ரூபாய்
தயிர் சாதம் = 3 ரூபாய்
சாம்பார் சாதம் = 5 ரூபாய்
எலுமிச்சை சாதம் = 5 ரூபாய்
கருவேப்பிலை சாதம் = 5 ரூபாய்
சப்பாத்தி (2) = 3 ரூபாய்
அம்மா உணவகத்தில் இந்த விலையில் யார் வேண்டுமானாலும், எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிட்டுக் கொள்ளலாம் என்பதுதான் தனிச்சிறப்பு. ஆனால் அம்மா உணவகத்தில் பார்சல் உணவு மட்டும் கிடையாது. அதேநேரம், ஏழை மக்கள் தட்டு எடுத்துவந்தால், அதில் ஒரு நபருக்குத் தேவையான உணவு வழங்கப்பட்டது. அதனால் ஏழைகளுக்கு அம்மா உணவகம் சகல வழிகளிலும் உதவிகரமாக, பசிப்பிணி போக்கும் மருந்தகமாக விளங்கியது.
- நாளை பார்க்கலாம்