அமெரிக்காவில் அம்மா உணவகம்

என்ன செய்தார் சைதை துரைசாமி – 500

அமெரிக்காவில் இயங்கிவரும் அம்மா உணவகம் பற்றிய ஒரு செய்தி சமீபத்தில் சோஷியல் மீடியாவில் டிரெண்டிங் ஆனது. ராணிப்பேட்டையைச் சேர்ந்த எம்.எஸ்.தனராஜ் என்பவர் அமெரிக்காவின் நியூஜெர்சியில் இருக்கும் அம்மா உணவகத்திற்கு சென்றுவந்த அனுபவத்தை ஃபேஸ்புக்கில் வீடியோவாக  https://www.facebook.com/reel/1018075941197924 வெளியிட்டிருந்தார்.

அந்த வீடியோவில் தனராஜ், ‘’அமெரிக்காவின் நியூஜெர்சியில் அலுவலகங்கள், கல்லூரிகள் நிரம்பிய ஏரியாவில் தமிழர் ஒருவர் அம்மா உணவகம் வைத்திருப்பதைக் கண்டு ஆச்சர்யமானேன். அம்மா உணவகத்தின் பாணியில் இந்த ஹோட்டல் உருவாக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் படத்துடன் இயங்கிவரும் அம்மா உணவகத்தில் தமிழகத்தின் பாணியில் மலிவு விலையில் தரமான உணவு வழங்கப்படுகிறது.

இந்த ஹோட்டல் எவ்வித ஆடம்பரமும் இல்லாமல் எளிமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்கு நான் சாப்பிட்டுப் பார்த்தேன். சுவையும் மிகவும் சிறப்பாக இருந்தது. அமெரிக்காவின் நியூஜெர்சிக்குப் போனால் அம்மா உணவகத்தை மிஸ் செய்யாதீர்கள்’’ என்று கூறியிருந்தார்.

இந்த வீடியோ பார்த்த நண்பர்கள் சிலர் தமிழகத்தில் அம்மா உணவகம் உருவான வரலாறு பற்றி பல்வேறு சந்தேகங்கள் எழுப்பினார்கள். ஏற்கெனவே இந்த தொடரில் அம்மா உணவகம் பற்றி எழுதியிருக்கிறோம் என்றாலும், அனைவரது சந்தேகங்களையும் தீர்க்கும் வகையில் மீண்டும் ஒரு முறை முழுமையாகத் தருகிறோம்.

அம்மா உணவகம் உருவாகுவதற்கு விதை போட்டவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். என்று சொன்னால் ஆச்சர்யமாக இருக்கும். ஆனால், அதுதான் உண்மை.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். நடித்த நாடோடி மன்னன் படம் பார்த்து ரசித்த சைதை துரைசாமியின் எண்ணத்தில் உதித்ததே அம்மா உணவகத்தின் முன்னோடியான மலிவு விலை உணவகம்.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment