என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 64
தமிழகத்தில் அம்மா உணவகத்திற்குக் கிடைத்த வெற்றியும் வரவேற்பும் இந்தியா முழுவதும் எதிரொலித்தது. அதனால் ஒவ்வொரு மாநிலத்தில் இருந்து அரசியல்வாதிகளும், உயர் அதிகாரிகளும் நேரில் வந்து அம்மா உணவகம் செயல்படும் விதம் குறித்து மேயர் சைதை துரைசாமியிடம் ஆலோசனை செய்தார்கள். தங்கள் மாநிலத்தில் அம்மா உணவகத்தை வெவ்வேறு பெயரில் அறிமுகம் செய்தார்கள்.
கர்நாடகாவில் இந்திரா காந்தி உணவகம்.
அம்மா உணவகத்தின் பண்புகளை முழுமையாக எடுத்துக்கொண்டு, பசியைப் போக்குவோம் சுயமரியாதையுடன் – என்ற முழக்கத்துடன் கர்நாடகாவில் இந்திராகாந்தி உணவகம் தொடங்கப்பட்டது. சூரிய மின்சக்தியில் இயங்கும் இந்த உணவகத்தில் காலை உணவு 5 ரூபாய்க்கும் மதிய உணவு 10 ரூபாய் என்றும் நிர்ணயம் செய்தார்கள். மேயர் சைதை துரைசாமியின் கனவை நிறைவேற்றுவது போன்று இந்தத் திட்டம் கர்நாடக கிராமப்புறங்களில் நடமாடும் உணவகமாகவும் செயல்படத் தொடங்கியது.
ஆந்திராவில் அண்ணா கேன்டீன்
அம்மா உணவகத்தை அப்படியே பின்பற்றி, ஆந்திராவில் மலிவு விலை உணவகமாக அண்ணா கேன்டீன் தொடங்கப்பட்டது. இங்கு 5 ரூபாய்க்கு சாப்பாடு வழங்கப்படுகிறது. காலையில் இட்லி, தோசை, பொங்கல், உப்புமா போன்ற சிற்றுண்டிகள் குறைந்த விலையில் வழங்கப்படுகிறது. ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி.ராமராவை ஆந்திர மக்கள், ‘அண்ணாகாரு’ என்று அன்புடன் அழைப்பது வழக்கம். அவரது நினைவாக மலிவு விலை உணவகத்துக்கு ‘அண்ணா’ கேன்டீன் என்று பெயர் சூட்டி மக்களிடம் அன்றைய முதல் அமைச்சர் சந்திரபாபு நாயுடு நல்ல பெயரை சம்பாதித்தார்.
- நாளை பார்க்கலாம்